அதுக்குன்னு இத்தனையா.. இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. அதிர்ந்த மக்கள்
27 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகிறது
சென்னை: தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது... அதன்படி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6,000 கி.மீ.க்கு மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன...
இந்த சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக மொத்தம் 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டண உயர்வு
இவைகளில் 27 சுங்கச்சாவடிகளில், இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது... அதன்படி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன உரிமையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என தெரிகிறது.. மேலும் சரக்கு வாகனங்களில் வாடகை கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

5 முதல் 50 ரூபாய் வரை
கட்டண உயர்வு பட்டியலில், திண்டிவனம் - ஆத்துார், போகலுார், பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலுார், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி,மாத்துார், நல்லுார், நாங்குனேரி, ஸ்ரீபெரும்புதுார், பள்ளிக்கொண்டா, பரனுார், பட்டரை பெரும்புதுார், புதுக்கோட்டை - வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதுார், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன.இந்த சுங்கச்சாவடிகளில், 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்க உள்ளது.

கட்டண உயர்வு
இவைகளில் 28 சுங்கச்சாவடிகளில், இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது... அதன்படி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன உரிமையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என தெரிகிறது.. மேலும் சரக்கு வாகனங்களில் வாடகை கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் 60 கி.மீ., இடைவெளிக்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஏற்ககனவே அறிவித்திருக்கிறார்.. அதன்படி, 16 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டிய பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய அவசியமும் தற்போது எழுந்துள்ளது.. அதுமட்டுமல்லாமல், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க கட்டணத்தையும் உயர்த்தி இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications