Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெயர்: சந்திரசேகர ராவ்.. தற்போதைய மனநிலை - பாஜக எதிர்ப்பு.. எதிர்கால திட்டம் - பிரதமர் நாற்காலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகப் பேசி வருகிறார். அவருக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்ததற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள் என சந்திரசேகர ராவ் கேட்டது தான் இந்த வாரத்தின் அரசியல் ஹாட் டாப்பிக்.

எந்த முட்டாள் வரியை ஏற்றினார்களோ, அவர்கள் தான் வரியைக் குறைக்க வேண்டும். பாஜகவை கடலில் தூக்கிப் போடவேண்டும் என்று ஒரு மாநில முதல்வர் தடாலடியாகப் பேசியிருக்கிறார் என்றால் அது சந்திரசேகர ராவைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ்

தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக வேண்டும் என பலப்போராட்டங்களை முன்னெடுத்து, அதன் வெற்றியாக, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து 2014ல் தெலுங்கானா என்ற தனி மாநிலம் உதயமானது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, தெலுங்கானாவில் ஆட்சி அமைத்தது. புது மாநிலத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கட்டமைப்பு விதிகளையும் சிறப்பாக செய்யத் தொடங்கினார் சந்திரசேகர ராவ்.

பாஜக எதிர்ப்பு

பாஜக எதிர்ப்பு

தெலுங்கானாவில் பாஜக வளர்ந்துவிடக்கூடாது என்பதில், மிகத் தீவிரமாக இருக்கிறார் சந்திர சேகர ராவ். தேசியக் கட்சிகள் தெலுங்கானாவில் வளர்ந்துவிடக்கூடாது என 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த முடிவெடுத்தார் ராவ். சொந்த கட்சியில் இருந்து ஒரு முக்கிய உறுப்பினர் பாஜகவில் இணைந்ததில் இருந்தே பாஜகமீது வெறுப்பில் இருந்தார் ராவ்.

தேசிய தலைவர்

தேசிய தலைவர்

தன்னை ஒரு தேசியத் தலைவாராக முன்னிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் சந்திரசேகர ராவ். அதன் ஒரு பகுதியாகவே பாஜக எதிர்ப்பை முன்னெடுத்திருக்கிறார் என்கிறார்கள் வல்லுனர்கள். இந்தியா முழுவதும் பாஜக எதிர்ப்பு மனநிலை ஆரம்பித்திருக்கிறது, இதனைப் பயன்படுத்தி, தனக்கு சாதகமான முடிவை எடுக்கவே பாஜகவை எதிர்த்து வருகிறார் ராவ்.

மாநிலம்

மாநிலம்

தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் என பாஜகவுக்கு எதிராகவும், ஒடிசா கோவா என சில மாநிலத்தில் உள்ள கட்சிகள் தொடர்ந்து பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இவர்களின் கூட்டு முயற்சியில் தன்னை ஒரு பெரும் தலைவராக காட்ட அனைத்து தலைவர்களையும் ஏற்கெனவே சந்தித்தார் ராவ். ஆனால் அது கைகூடவில்லை. இந்தநிலையில், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் இதை முடித்துக்காட்டவே தேசிய அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

தெற்கில் சந்திரசேகர ராவ் தேசிய தலைவராக உருவெடுக்க நினைப்பது போல், மேற்கில் மம்தா பானர்ஜியும் தேசியத் தலைவராவதற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறார். சொல்லப்போனால், சந்திர சேகரராவுக்கு முன்னரே மம்தா இதைக் கையில் எடுத்துவிட்டார். இருவருடைய ஒரே குறிக்கோள் தேசிய அளவில் ஒரு அணி அமைத்து செயல்படுவதுதான், இருவருக்கும் கையிலெடுத்திருக்கும் யுத்தி பாஜக எதிர்ப்பு தான். இப்போது இவர்கள் இருவருக்குமே ஒரு பனிப்போர் நிலவுவதாகவும் அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 பிரதமர் ஆசை

பிரதமர் ஆசை

தனக்கு நெருக்கமான அனைத்து தலைவர்களையும் தனித்தனியாக அழைத்துப் பேசி வருகிறார் சந்திர சேகர ராவ். சொந்த மாநிலத்திலும் பாஜகவை வளரக்கூடாது, அதேநேரம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் தன்னை ஒரு தேசிய தலைவராக வந்து, பிரதமர் ஆகும் திட்டத்தில் இருக்கிறார் சந்திரசேகர ராவ். பிரதமர் கனவின் ஆசையில் இருப்பதால், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், விவசாயிகள் பிரச்னை என பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார் சந்திரசேகர ராவ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+