சவப்பெட்டியை டக்னு எட்டி உதைத்த "உடம்பு".. ஆச்சரியம் தந்த தாய்லாந்து பெண்! நெகிழ வைத்த புத்த கோயில்
பாங்காக்: சடலங்களை புதைக்கும்போதும், அல்லது தகனம் செய்யும் நேரத்திலும் அல்லது இறுதி சடங்கு செய்யும் இறுதி நேரத்திலும் எத்தனையோ அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை கொண்டதாக இருந்தாலும், பரபரப்பை நிச்சயம் ஏற்படுத்திவிடும். அப்படித்தான் தாய்லாந்தில் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.
தாய்லாந்தில் உள்ள பேங்காங்கில், அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. இங்கு பிரபலமான புத்தர் கோயில் ஒன்று உள்ளது.. அங்குள்ளவர்கள் வழக்கப்படி, 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலத்தை சவப்பெட்டியில் வைத்து இந்த புத்தர் கோயிலுக்கு எடுத்து வந்துள்ளனர்.

கதவை தட்டும் சத்தம்
அப்போது கோயில் நிர்வாகி, இறப்பு சான்றிதழை எப்படி பெறுவது? என்பது குறித்த உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுக்கு வழிமுறைகளை சொல்லி கொண்டிருந்தார்.. அந்த நேரத்தில் திடீரென ஒரு சத்தம் கேட்டுள்ளது.. கோயிலின் அமைதியால் அந்த சத்தம் அங்குள்ளவர்களுக்கு அதிகமாகவே கேட்டது..
யாரோ கதவை தட்டுவது என்று நினைத்து, வெளியில் சென்று வாசலில் பார்த்துள்ளனர்.. ஆனால், அங்கே யாருமே இல்லை.. பிறகு மறுபடியும் நிர்வாகியும், உறவினர்களும் சான்றிதழ் தொடர்பாக பேச துவங்கினர்.
அப்போது மீண்டும் சத்தம் வரவும், சவப்பெட்டியில் இருந்துதான் சத்தம் வருகிறது என்பதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே சவப்பெட்டியை திறந்து பார்த்தபோதுதான், அதிலிருந்த பெண் கதவை தட்டுகிறார் என்பது தெரியவந்தது.. இதை பார்த்து ஆச்சரியமடைந்த உறவினர்கள், உடனடியாக அப்பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி சென்று அனுமதித்தனர்.. அங்கு தீவிர சிகிச்சையும் தற்போது தரப்பட்டு வருகிறது.
மூச்சு பேச்சில்லை
இதுகுறித்து பெண்ணின் சகோதரர் Mongkol Sakulkoo செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "Hypoglycaemia என்ற பிரச்சனையால் என்னுடைய தங்கை Chonthirat பாதிக்கப்பட்டுள்ளார்.. இந்த குறைபாடு இருந்தால், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு குறைந்துவிடும்.. இதனால் மயக்கமும், தலைசுற்றலும் வந்துவிடும்..
கடந்த 2 வருடமாகவே இந்த கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்.. சம்பவத்தன்று நிலைமை மோசமாகி, மயங்கி விழுந்துவிட்டார்.. மூச்சும் நின்றுவிட்டது.. 2 நாட்களாக பேச்சு மூச்சு இல்லாததால்தான், Chonthirat இறந்துவிட்டதாக நினைத்து இறுதி சடங்கு செய்ய நினைத்தோம்.. இதனால் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, என் தங்கையின் உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தோம்.
சவப்பெட்டியில் சத்தம்
ஆனால், முறையான இறப்புச் சான்றிதழ் இருந்தால்தான், உடல் தானத்தை ஏற்போம் என்று மருத்துவமனையில் சொல்லி விட்டார்கள். அதனால், Nonthaburi என்ற இடத்திலுள்ள ஒரு புத்தர் கோவிலில் இலவசமாக இறுதிச்சடங்குகள் செய்வதைக் குறித்து கேள்விப்பட்டோம். உடனே சவப்பெட்டியில் என் தங்கையின் உடலை வைத்து அங்கு கொண்டு சென்றோம்.
ஆனால், அங்குள்ளவர்களும் இறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் இறுதிச்சடங்கு செய்யமுடியாது என்று சொல்லி விட்டனர்.
பிறகு கோவில் ஊழியர் ஒருவர், இறப்புச்சான்றிதழ் பெறுவது எப்படி என்று எங்களிடம் விவரித்து கொண்டிருந்தார்.. அப்போதுதான் என் தங்கை Chonthirat கண்களை லேசாக திறந்தபடி, சவப்பெட்டியின் உள்பக்கத்தை தட்டி, காலால் அதை தள்ள முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்தோம்.
நெகிழ வைத்த புத்தர் கோயில்
உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தோம்.. அந்த கோவில் நிர்வாகிகள், என் தங்கையின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டது எங்களுக்கு நெகிழ்ச்சியை தந்துள்ளது.. என் தங்கை Chonthiratன் உடலில் நல்ல முன்னேற்றம் தென்பட்டுள்ளது.
என்னுடைய சகோதரி Chonthiratன் சடங்குகளை செய்வதற்காக, 500 கி.மீ. தூரத்திலுள்ள புத்தர் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து, இப்போது என் தங்கையுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு கிளம்புகிறோம்" என்று பூரிப்புடன் தெரிவித்துள்ளார். .
ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அந்த பெண்ணுக்கு மாரடைப்பும் வரவில்லை, மூச்சுதிணறலும் வரவில்லை, வெறும் மயக்கம்தான் என்று உறுதிப்படுத்தி உள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications