பட்டியலை அப்படியே ஜெராக்ஸ் எடுங்க! மாற்றமேயில்லை.. திமுக உட்கட்சி தேர்தலால் நிர்வாகிகள் அதிருப்தி!
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவே சத்தம் இல்லாமல் திமுகவின் கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. வட மாவட்டங்களில் அவ்வளவாக பிரச்சனை இல்லாத நிலையில் திருச்சி ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவினருக்குள்ளேயே கோஷ்டி மோதல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்தி அதனை தேர்தல் ஆணையத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் முடிவுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலில் ஒன்றிய நகர அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திமுக உட்கட்சி தேர்தல்
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி ஏற்கனவே பதவியில் உள்ள ஒன்றிய செயலாளர்களை பதவியில் தொடரலாம் என மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சி தலைமையிடம் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு தற்போது பதவியில் இருக்கும் நிர்வாகிகளை தவிர யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. அவ்வாறு உட்கட்சி மோதல் காரணமாக வேட்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என தேர்தல் நடத்தும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்கின்றனர் உடன்பிறப்புகள்.

பட்டியல் தயார்
அந்த வகையில் விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,சேலம் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. திண்டுக்கல் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் நிர்வாகிகள் பட்டியல் தயாராகிவிட்டது. ஒன்றிய செயலாளர்கள் பதவி இல்லாமல் ஒன்றிய துணை செயலாளர்கள் அமைப்பாளர்கள் மாவட்ட பிரதிநிதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தலாம் என திட்டமிட்டு இருந்தாலும் ஒப்புக்காக வேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டு இருப்பதாகவும் ஆனால் பட்டியல் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் மூத்த அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக்கு அனுப்ப தயாராக இருக்கிறது.

உடன்பிறப்புகள் குமுறல்
அதே நேரத்தில் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தலைமை வழங்கவில்லை என சில உடன்பிறப்புகள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். மாவட்ட பிரதிநிதி மற்றும் ஒன்றிய செயலாளர் என இரு பொறுப்பில் இருப்பவர்கள் மாவட்ட பிரதிநிதி பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பின்பற்றியுள்ளனர். மாவட்ட பிரதிநிதிகள் பட்டியலையும் ஏற்கனவே ஏதாவது ஒரு பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளுக்கே வழங்க மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் மற்ற நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடும் போட்டி
அதே நேரத்தில் ஒன்றிய அளவிலான இளைஞரணி, மகளிர் அணி, அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. அந்த பதவிகளுக்கும் ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகளின் பெயரை பரிசீலனையில் உள்ளதால் தங்களுக்கு ஆளும் கட்சியாக இருக்கும் போது பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் மோதல் அதிகமாக இருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்த உடன்பிறப்புகள்.

சுமூகமான உறவு இல்லை
அங்கு அமைச்சருக்கும் மாவட்ட செயலாளருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக இருந்து தேர்தலில் ஒருதலைபட்சமாக குளறுபடி செய்து முடிவு செய்து விட்டதாக கூறுகின்றனர் கட்சியினர். இதனால் அமைச்சர் பரிந்துரைத்த பெயர்களை மாவட்ட செயலாளர் நிராகரிப்பது மாவட்ட செயலாளர் பரிந்துரைத்த பெயர்களை அமைச்சர் நிராகரிப்பது என இருவருக்குள்ளும் கடும் போட்டி உள்ளது. இது தொடர்பாக 12க்கும் மேற்பட்ட ஒன்றியச் செயலாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video

குழப்பத்தில் தலைமை
இருவருமே தனித்தனி பட்டியலை தயார் செய்து தேர்தல் பொறுப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் யார் பட்டியலை தலைமைக்கு அனுப்புவது என அவர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் பட்டியலை தயார் செய்வதில் இழுபறி இருப்பதாகவும், இந்த விவகாரம் தலைமைக்கு சென்றிருந்தாலும் அதிமுக உட்கட்சி பிரச்சனைகளால் இது அவ்வளவாக வெளியில் தெரியவில்லை என்கின்றனர் உடன்பிறப்புகள்.
-
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன்












Click it and Unblock the Notifications