'தி காஷ்மீர் பைல்ஸ்'.. - விடுமுறையும் வரிச்சலுகையும் கொடுத்து கொண்டாடும் பாஜக அரசுகள்
சென்னை: 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் வெளியாகிய சில தினங்களிலேயே, அந்தப்படத்துக்கு இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் வரிச்சலுகையை அறிவித்து வருகின்றன.
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து தமிழகத்தில் பெரிய அளவில் பேச்சுகள் எழாத நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்தப்படம் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட இருக்கிறது.
அரசு அதிகாரிகள் இந்தப்படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும் என பல மாநிலங்களில் இந்தப்படத்தைப் பார்க்க விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தி காஷ்மீர் பைல்ஸ்
90-களின் முற்பகுதியில் காஷ்மீரில் நடந்த தாக்குதல்களால் அங்கிருந்த பண்டிட்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதை மையக்கருவாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பண்டிட்கள் மீதான தாக்குதல், அதன்பிறகான அரசியல் இதையெல்லாம் இந்தப்படம் பேசி வருகிறது. விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர், மிதுன் சக்கரவர்த்தி நடிப்பில் கடந்த 11ம் தேதி அன்று தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெளியானது.

பாஜக
இந்தப்படம் வெளியானதுமே பாஜக இந்த படத்தைக் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்த பிரதமர் மோடி, திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். அரியானா, மத்திய பிரதேஷ், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் , உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த திரைப்படத்திற்கு வரிச்சலுகை வழங்கியுள்ளது. மேலும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மா, இந்த திரைப்படத்திற்கு வரிச்சலுகை வழங்கக்கோரி முதலமைச்சருக்கு கடிதம் எழுதவுள்ளதாகத் தெரிவித்தார்.

விடுமுறை
மத்திய பிரதேசத்தில் இத்திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைப் பார்த்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இந்த படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என, இந்த படத்தைப் பார்க்க போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த படம் எல்லோரிடமும் சென்று சேர வேண்டும் என பாஜக முயற்சி செய்து வருகிறது.

தமிழகத்தில் காஷ்மீரி பைல்ஸ்
தமிழகத்தில் இந்த படத்துக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை, அதோடு பெரிய அளவில் இந்தப்படம் குறித்த பேச்சும் எழவில்லை. நகரங்களில் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டுமே இந்தப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பாஜக தலைவரோடு, பலரும் சேர்ந்து இந்தப்படத்தைப் பார்க்கலாம் என தமிழக பாஜக சார்பில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் பைல்ஸ் குறித்த பேச்சு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. விரைவில் இந்தப்படத்தை தமிழில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் இந்த படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருப்பதாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications