சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது.. மீண்டும் அவரை பணியில் சேர்த்துவிட்டோம்- Zomato நிறுவனர் பரபர ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் சகிப்புத்தன்மை இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் என்று சொமேட்டோ - இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ஆகாஷ் என்ற தமிழரிடம் இந்தி குறித்து பேசியது இணையத்தில் சர்ச்சையாகி உள்ளது. ஆர்டர் செய்த உணவு முழுதாக கிடைக்கவில்லை என்று கஸ்டமர் கேரில் புகார் அளித்த ஆகாஷிடம் சொமேட்டோ கஸ்டமர் கேர் ஊழியர் பேசிய விதம்தான் சர்ச்சையாகி உள்ளது.

ஆகாஷுக்கு அந்த சொமேட்டோ ஊழியர் ரீபண்ட் அளிக்க மறுத்ததோடு.. நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவது கஷ்டமாக இருக்கிறது. இந்தியாவின் தேசிய மொழி இந்தி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்று அந்த சொமேட்டோ அதிகாரி திமிராக பதில் அளித்துள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

இது இணையம் முழுக்க சர்ச்சையானது. இதையடுத்து #Reject_Zomato என்ற டேக் தற்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. இந்தி திணிப்பை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தமிழர்கள் பலர் ட்வீட் செய்து வந்தனர். இதையடுத்து அந்த குறிப்பிட்ட சொமேட்டோ ஊழியரை வேலையில் இருந்து நீக்கியதோடு, சொமேட்டோ நிறுவனம் தமிழர்களிடம் மன்னிப்பும் கேட்டது.

மீண்டும் சேர்ப்பு

மீண்டும் சேர்ப்பு

அந்த குறிப்பிட்ட பெண் ஊழியரை பணியில் இருந்து நீக்குவதாக சொமேட்டோ அறிவித்த நிலையில், அவரை மீண்டும் பணியில் சேர்த்துவிட்டதாக சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்வீட்களில், சப்போர்ட் சென்டரில் இருக்கும் ஒருவர் தவறுதலாக செய்த சிறிய தவறுக்காக ஒரு உணவு டெலிவரி நிறுவனம் தேசிய பிரச்சனையாகி உள்ளது.

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை

இந்த நாட்டில் சகிப்புத்தன்மை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கூலாக இருக்கும் குணம் அதிகரிக்க வேண்டும். இப்போது இருப்பதை விட சகிப்புத்தன்மை அதிகம் இருக்க வேண்டும். இதில் யார் மீது குற்றஞ்சாட்டுவது? நாங்கள் அந்த ஊழியரை மீண்டும் பணிக்கு சேர்த்துள்ளோம். அவர் செய்த இந்த ஒரு விஷயத்திற்காக அவரை வேலையைவிட்டு தூக்க வேண்டும் என்ற தேவை இல்லை.

பாடம்

பாடம்

அவர் இதை பாடமாக எடுத்துக்கொண்டு, வரும் நாட்களில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம். இன்னொரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் கால் சென்டரில் இருக்கும் நபர்கள் இளமையானவர்கள். அவர்கள் இப்போதுதான் தங்கள் பணிகளில் பல்வேறு படிப்பினைகளை கற்று வருகிறார்கள். அவர்கள் கற்றுக்கொள்ளும் காலத்தில் இருக்கிறார்.

Recommended Video

    தவறாக பேசிய ஊழியரை பணி நீக்கம் செய்து விட்டோம்.. மன்னிப்பு கேட்ட Zomato
    மாநில மொழி

    மாநில மொழி

    அவர்கள் மொழி அறிஞர்கள் கிடையாது, மாநில மொழி உணர்வுகள் அவர்களுக்கு தெரியாது. சொல்லப்போனால் எனக்கும் அதை பற்றி தெரியாது. அதே சமயம் நாம் மற்றவர்களின் குறைபாடுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களின் மொழிகளை ஏற்றுக்கொண்டு, அவர்களின் மொழி உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். தமிழ்நாடு நாங்கள் உங்களை விரும்புகிறோம்.

    குறைகள்

    குறைகள்

    வீ லவ் யூ. இந்தியாவின் மற்ற பகுதிகளை எந்த அளவிற்கு விரும்புகிறோமோ அதே அளவிற்கு கூடவோ, குறையவோ இல்லாமல் உங்களையும் விரும்புகிறோம். நமக்கு இடையே எவ்வளவு வேறுபாடு இருக்கிறதோ அதே அளவிற்கு நாம் எல்லோருக்கும் இடையில் ஒருமையும் இருக்கிறது, என்று சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+