ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்.. அறிக்கையை தாக்கல் செய்த குழு.. அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்ற பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலை அதிகரித்து வந்தன. இதனால் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தின. இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத் தடை செய்ய சிறப்பு சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இதுதொடர்பாக உள்துறைச் செயலாளர் வெளியிட்டிருந்த அரசாணையில், இந்த ஆன்லைன் விளையாட்டுகள் உண்மையிலேயே திறன்களை வளர்க்கிறதா என்பது குறித்து இந்த குழு ஆராயும் என தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது எவ்வாறு, ஆன்லைன் விளையாட்டுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள், நிதி இழப்புகள், இணையவழி பணபரிவர்த்தனை எந்த அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆன்லைன் சூதாட்டை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 விவகாரங்கள் குறித்து இந்த குழு ஆய்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
இந்த குழுவுக்கான கால அவசாகம் முடிவடைந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளில் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, பெருமளவில் பணத்தை இழப்பதுடன், அதன் காரணமாக கடன் தொல்லை மற்றும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். இதனால் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டைத் விளையாட தூண்டும் விளம்பரங்கள், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை கட்டுப்படுத்தவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இயற்ற தேவையான ஆய்வு செய்து , அதன் அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications