Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலவரக்காடான ராயப்பேட்டை! கூப்பிடு தூரம் தான்..45 நிமிடமாய் எட்டி பார்க்காத போலீஸ்! குழம்பி போன இபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்குவதற்கு சில மணிதுளிகளுக்கு முன்பாக அதிமுக தலைமை அலுவலகமே கலவரக் காடாக மாறிய நிலையில் மிக அருகில் இருந்தும் கலவரத்தை கட்டுப்படுத்தவோ போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தவோ கூடுதல் போலீசார் வரவழைக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

Recommended Video

    AIADMK பொதுக்குழுக்கூட்டம் | ரத்தக்களறியான ராயப்பேட்டை | EPS VS OPS

    அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்த நிலையில் ஒற்றைத் தலைமை கோரிக்கை திடீரென எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போதே ஒற்றைத் தலைமை தேவை என பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி போட்டு முழக்கமிட்டனர்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், ஓபிஎஸ்க்கு ஆதரவாக சில முன்னாள் அமைச்சர்களும் , மாவட்ட செயலாளர்களும் திரண்டனர்.

    எடப்பாடி பழனிசாமி வெற்றி

    எடப்பாடி பழனிசாமி வெற்றி

    இந்நிலையில் இறுதி வெற்றியாய் எடப்பாடி பழனிசாமி தான் வென்றிருக்கிறார். பலகட்ட முட்டல் மோதல்களுக்குப் பிறகு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெறும் எனவும் தீர்மானமானது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

    ஓபிஎஸ் வருகை

    ஓபிஎஸ் வருகை

    முன்னதாக எடப்பாடி பொதுக்குழுவில் பங்கேற்க வானகரம் நோக்கி சென்ற நிலையில், கட்சி தலைமை அலுவலகம் நோக்கிச் சென்றார் ஓபிஎஸ். ஓபிஎஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் சாலையில் நாற்காலிகளை போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஓபிஸ் ஆதரவாளர்களை துரத்தி துரத்தி இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கினர். அதிமுக அலுவலகம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார்கள் அடித்து உடைக்கப்பட்ட நிலையில், சிலருக்கு மண்டை உடைக்கப்பட்டதோடு, ஓபிஎஸ் ஆதரவாளருக்கு கத்திக்குத்து விழுந்தது.

    திடீர் கலவரம்

    திடீர் கலவரம்

    ஆனாலும் இவ்வளவு வன்முறை, கலவரத்துக்கு இடையே அதிமுக தலைமை அலுவலகம் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள், பூட்டை உடைத்து அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மாயமாகினர். எப்போதுமே பரபரப்பாக காணப்படும் சென்னையில் மிக முக்கிய பகுதியான ராயப்பேட்டை பகுதியில் தான் அதிமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. பொதுவாக அதிமுக அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பது வழக்கம் இந்நிலையில் தற்போது அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார் திடீரென மாயமாயினர்.

    போலீசார் மாயம்

    போலீசார் மாயம்

    அதே நேரத்தில் அதிமுக அலுவலகத்தை சுற்றிலும் எப்போதும் ரோந்து போலீசார் இருப்பதும் வழக்கம். ஆனால் அவர்களும் இவ்வளவு கலவரங்களுக்கு நடுவிலும் வரவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகபட்சம் 150 மீட்டர் தொலைவில் தான் ராயப்பேட்டை காவல் நிலையம் உள்ளது ஏன் காவல்துறை தலைவர் அலுவலகம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்த தகவல் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பாகியது.

    தாமதமாக வந்த போலீஸ்

    தாமதமாக வந்த போலீஸ்

    ஆனாலும் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயமான நிலையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்படவில்லை. இதனால் நிமிடத்திற்கு நிமிடம் மோதல் தீவிரமாகி கட்சி அலுவலகத்தின் கதவு உடைக்கப்படும் நிலைக்குச் சென்றது. இதையடுத்தே சுமார் 45 நிமிட இடைவேளைக்கு பிறகு அங்கு ஆயுதப்படை போலீசார் மற்றும் அதிரடி படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். முதல்முறையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக மாவட்ட செயலாளரான விஎன் ரவி உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    அப்செட்டான எடப்பாடி

    அப்செட்டான எடப்பாடி

    தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யும் பணியை அதிரடிப்படை போலீசார் துவங்கியுள்ள நிலையில் ராயப்பேட்டை ஔவை சண்முகம் சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் குறித்தும் காவல்துறையினர் வராதது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமியின் காதுகளுக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் இதற்கு பின்னனியில் யார் இருக்கிறார் என விசாரிக்குமாறு கட்சி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+