சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினகரனை வைத்து சூப்பர் பிளான் போட்ட பாஜக.. சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு இதுதான் காரணமா?

லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வைத்து நிறைய திட்டங்களை போட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Subramanian swamy Tweet | சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு என்ன காரணம்?- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வைத்து நிறைய திட்டங்களை போட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

    லோக்சபா தேர்தல் நாடு முழுக்க நடந்து வருகிறது. தமிழகத்தில் நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் அதிமுக, திமுக போலவே அமமுக மிக முக்கியமான கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்த கருத்து அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்

    டிடிவி தினகரன்

    இந்த நிலையில் டிடிவி தினகரன் குறித்து டிவிட் செய்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, விஷ்வ ஹிந்தி பரிஷத் அமைப்புடன் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தேன். தமிழகத்தில் இருக்கும் தேசியவாதிகள் கண்டிப்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஊழல் கட்சிகள்தான். ஆனால் தேசிய கூட்டணிக்கு ஏற்றவர் தினகரன் மட்டும்தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    பாஜக தலைவர்கள்

    பாஜக தலைவர்கள்

    பொதுவாக பாஜக தலைவர்கள் எல்லோரும் ஒரு மாதிரி பேசினால், அதற்கு அப்படியே எதிர்மாறாக பேசுவதுதான் சுப்பிரமணியன் சாமியின் வழக்கம். பாஜகவில் எல்லோரும் தங்களை சவுக்கிதார் என்று சொன்னபோது கூட, நான் சவுக்கிதார் கிடையாது, நான் பிராமணன் என்று பேசியவர்தான் சுப்பிரமணியன் சாமி.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    ஆனால் சுப்பிரமணியன் சாமி தற்போது பேசியதையும் அப்படி முரண்பட்ட கருத்தாக பார்க்க கூடாது என்கிறார்கள். பாஜக தலைவர்களுக்கு தெரிந்தேதான் சுப்பிரமணியன் சாமி இப்படி பேசி இருக்கிறார். பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து சுப்பிரமணியன் சாமி இந்த டிவிட்டை செய்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

    தமிழக சட்டசபை

    தமிழக சட்டசபை

    அதன்படி தமிழக சட்டசபை இடைத்தேர்தல் தற்போது நடந்து வருகிறது. இந்த இடைத்தேர்தலில் அமமுக கணிசமான இடங்களை பெறும் என்று கூறப்படுகிறது. சமயங்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை கூட ஏற்படலாம் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் தமிழகத்தில் ஆட்சி நடத்த தினகரன் ஆதரவு தேவைப்படும். இதை கருத்தில் கொண்டே சுப்பிரமணியன் சாமி இப்படி பேசியுள்ளார் என்கிறார்கள்.

    மோடி என்ன சொன்னார்

    மோடி என்ன சொன்னார்

    சில நாட்களுக்கு முன் பேசிய மோடி, நாட்டின் நலனுக்காக சிறிய கட்சிகளுடன், சுயேட்சைகளுடன், எதிரிகளுடன் கூட கூட்டணி வைக்க தயார் என்று கூறினார். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை மனதில் வைத்து மோடி அப்படி பேசினார். தற்போது சுப்பிரமணியன் சாமியின் டிவிட்டிற்கும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    சிறிய கட்சி ஆதரவு

    சிறிய கட்சி ஆதரவு

    அதாவது லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறாமல் போய், அப்போது சிறிய கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டால், அமமுகவின் ஆதரவை பெறலாம் என்று திட்டமிட்டு இப்படி பேசி இருக்கிறார். அதிமுக மீதான அதிர்ச்சி வாக்கு திமுகவிற்கு செல்லாமல் தடுக்கவும் இப்படி செய்துள்ளார் என்று காரணங்கள் அடுக்கப்படுகிறது.

    தினகரன் அரசியல்

    தினகரன் அரசியல்

    இவரது இந்த டிவிட்டிற்கு பின் தினகரன் அரசியல் களத்தில் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். தொங்குசட்டசபை அல்லது தொங்கு பாராளுமன்றம் உருவாகும் போது, தினகரன் முக்கியமான நபராக மாற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    The reason behind BJP leader Subramanian Swamy's sudden support to TTV Dinakaran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X