சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின்காந்த வெடிப்பு! இன்று பூமியை தாக்கும் சூரிய புயல்..என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் எனத் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சூரியனிலிருந்து புறப்பட்டு வரும் 'சூரிய புயல்' எனப்படும் சக்தி வாய்ந்த காந்த அலைவரிசை ஜூலை 18ம் தேதியான இன்று பூமியை தாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் ரேடியோ சிக்னல், ஜிபிஎஸ் சேவை உள்ளிட்டவை தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Recommended Video

    Satellite-க்கு ஆபத்து! Birds கூட குழம்பும் | Sun Solar Flare 2022 |*Science

     நிற்காத மழை! மேக வெடிப்புக்கு பின் வெளிநாட்டு சதி.. குண்டை தூக்கி போடும் தெலுங்கானா முதல்வர்! நிற்காத மழை! மேக வெடிப்புக்கு பின் வெளிநாட்டு சதி.. குண்டை தூக்கி போடும் தெலுங்கானா முதல்வர்!

    சூரியனின் மேற்பரப்பிலிருந்து கிளம்பும் மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் 'Solar Storm' சூரிய புயல் என அழைக்கப்படுகிறது. கடந்த 1859ம் வலுவான ஒரு சூரிய புயல் பூமியை தாக்கியது. இதன் விளைவாக உலகம் முழுவதும் பிரகாசமான ஒளி ஏற்பட்டது.

     சூரிய மின்காந்த வெடிப்பு

    சூரிய மின்காந்த வெடிப்பு

    குறிப்பாக கரீபியன் தீவுப் பகுதிகளிலும் ரொக்கி மலைத் தொடர்ப் பகுதியிலும் மிகவும் பிரகாசமாக இந்த ஒளி தென்பட்டது. இது இரவு நேரத்தையும் பகல் போல காட்டியது. மட்டுமல்லாது இந்த புயலால் வட அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் தற்போது மற்றொரு பெரிய சூரிய புயல் பூமியை தாக்கும் என பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) கணித்துள்ளது.

     வளிமண்டல நிர்வாகம்

    வளிமண்டல நிர்வாகம்

    கடந்த ஜூன் 14ம் தேதி சூரியனிலிருந்து புறப்பட்ட காந்த அலைகள் இன்று பூமியை கடந்து செல்கின்றன. அந்த வகையில் இது எப்போது வேண்டுமானாலும் பூமியை தாக்கக்கூடும் அதாவது இந்த குறிப்பிட்ட நேரத்தில்தான் பூமியை தாக்கும் என கணிக்க இயலாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது சக்தி வாய்ந்த எக்ஸ் ரே கதிர்களை உருவாக்கும். இந்த கதிர்கள் பூமியில் பயன்படுத்தப்படும் குறைந்த மற்றும் அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ சிக்னல்களை பாதிக்கும் இதை ரேடியோ பிளாக்அவுட் என அழைக்கின்றனர்.

     ரேடியோ

    ரேடியோ

    எனவே இந்த சூரிய புயல்கள் இந்த மாதிரியான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும் என்று இயற்பியலாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தகவல் தெரிவித்துள்ளார். 1859க்கும் 2022ம் ஆண்டுக்கும் இடையே இது போன்ற பல சூரிய புயல்கள் பூமியை தாக்கியுள்ளன. இவ்வாறு சூரியனிலிருந்து வெளியாகும் காந்த ஒளியை A, B, C, M, மற்றும் X என ஐந்து முக்கிய வகைகளாக வகைப்படுத்தலாம்.

     சிக்கல் என்ன?

    சிக்கல் என்ன?


    இதில் X ஆனது அதிக தீவிரம் கொண்டது. இதனால் கப்பல்கள், விமானங்கள் சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ளலாம் என்றும் விண்வெளி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல் ஜிபிஎஸ் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதுபோல் இணைய சேவையிலும் பல பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக உலகம் பல்வேறு நாடுகள் தயாராகி வருகின்றன.

    English summary
    Scientists have warned that a powerful magnetic wave called 'solar storm' coming from the Sun may hit the Earth on June 18. They have also warned that the radio signal and GPS service may be temporarily affected due to this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X