சின்னம்மா கூட சேர்ந்து வேலை பாருங்க! உத்தரவிட்ட ஓபிஎஸ்? தேனி சையது கான் கூறிய பரபர தகவல்! என்னாச்சு?
சென்னை : அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மதுசூதனின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மலர் தூவி மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் இணைந்து பணியாற்ற வேண்டுமென உத்தரவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் ஓபிஎஸ் அப்படி கூறவில்லை என ஓபிஎஸ் ஆதரவு தேனி மாவட்ட செயலாளரான சையது கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறவில்லை, அதே நேரத்தில் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான ஓபிஎஸ் இன் தம்பி ஓ ராஜா இது குறித்து தூது சென்றதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு
இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வரும் நிலையில் தற்போது டிடிவி தினகரன் சசிகலா ஓபிஎஸ் ஆகிய மூவரின் சந்திப்பு விரைவில் நடைபெறும் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுகவில் புதிய அணியை திரட்டி எடப்பாடியை வெளியேற்றும் நடவடிக்கைகள் இருக்கும் எனவும் அடுத்தடுத்து யூகங்கள் வெளியாகின.

சசிகலா, டிடிவி தினகரன்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனிக்குச் சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரும் தற்போது தேனி மாவட்ட அதிமுக செயலாளர் பகுதியில் இருந்து நீக்கப்பட்டவருமான சையது கான் சந்தித்து பேசினார் தேனி மாவட்ட எல்லையில் டிடிவி தினகரனை வரவேற்றவர் சிறிது நேரம் பேசினார். இதனால் டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு விரைவில் இருக்கும் என கூறப்பட்டது அதிமுகவின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்தார்.

இணைந்து பணி
மேலும் சசிகலாவை சந்திக்கவும் ஓபிஎஸ் தேதியை கூட முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே அதிமுக முன்னாள் அவைத் தலைவரான மறைந்த மதுசூதனனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது நிர்வாகிகளிடையே பேசிய அவர் வருங்காலங்களில் தேனி மாவட்ட நிர்வாகிகள் சசிகலாவுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது.

சையது கான் மறுப்பு
தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிரடி காட்டி வரும் ஓபிஎஸ் சசிகலாவுடன் நேரடியாக கரம் கோர்த்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியான நிலையில் இதனை சையது கான் மறுத்துள்ளார். இதுகுறித்து தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான சையது கான், அதிமுக கழக முன்னாள் அமைச்சர் தலைவர் மதுசூதனன் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சசிகலாவுடன் இணைந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் பணியாற்ற வேண்டுமென ஓபிஎஸ் உத்தரவிட்டதாக கூறி பத்திரிகைகளில் வெளியான செய்தி பொய்யானது என்றும் உத்தரவு என்ற வார்த்தையை ஓ பன்னீர்செல்வம் பயன்படுத்தவில்லை எனவும் கூறினார். ஓபிஎஸ் விரைவில் சசிகலாவில் சந்திக்க இருப்பதாக கூறிவரும் நிலையில் சையது கானின் இந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications