சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் பாதிப்பு இல்லை..அச்சப்பட தேவையில்லை - மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வரும் 11ம் தேதி சனிக்கிழமை 50 ஆயிரம் மையங்களில் 14வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 21 பேர் ஓமிக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 11 நாடுகளிலிருந்து வந்த 5249 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மதுரையில் பரபரப்பு.. சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு கொரோனா.. ஓமிக்ரான் பாதிப்பா? பரிசோதனை தீவிரம்மதுரையில் பரபரப்பு.. சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு கொரோனா.. ஓமிக்ரான் பாதிப்பா? பரிசோதனை தீவிரம்

அச்சப்பட வேண்டாம்

அச்சப்பட வேண்டாம்

11 ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து இதுவரை 28 விமானங்கள் வந்துள்ளன. பரிசோதனை செய்யப்பட்ட5249 பேரில் ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 7 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என பரிசோதனை செய்யப்பட்டது. பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் பரிசோதனை முடிவில் 6 பேருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

பதற்றம் தேவையில்லை

பதற்றம் தேவையில்லை


உலகில் 38 நாடுகளிலும் ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. ஓமிக்ரான் என்பது வேகமாக பரவும் வைரஸ் என்றாலும் யாரும் பயமோ பதற்றமோ படத்தேவையில்லை. விழிப்புணர்வுடன் இருந்தாலே போதும். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நோய் பாதித்தாலும் உயிரிழப்பு ஏற்படாது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட நாடுகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட நாடுகளில் தொற்று அதிகம் பரவினாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் மா.சுப்ரமணியன் கூறினார்.

Recommended Video

    ஓமைக்ரான் வைரஸ்… பதற்றம் அவசியமில்லை…சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!
    விழிப்புணர்வு அவசியம்

    விழிப்புணர்வு அவசியம்

    தமிழகத்தில் வரும் 11ம் தேதி சனிக்கிழமை 50 ஆயிரம் மையங்களில் 14வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மா.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்தாலே நோய் பாதிப்பு வராமல் தடுக்கலாம் என்றும் நோய் வந்தாலும் மீண்டு விடலாம் என்றும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

    English summary
    Health Minister Ma Subramanian has said that no one in Tamil Nadu has been affected by Omicron so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X