சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிருப்தி சீனியர்கள் ஹாப்பி! விரைவில் அமைச்சரவை மாற்றம்? டேபிளில் டிக் அடிக்க காத்திருக்கும் லிஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகப் போவதாக பேச்சுகள் மீண்டும் மிகத் தீவிரமாக எழுந்து வரும் நிலையில், தற்போது அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும், அதிருப்தியில் இருக்கும் சில சீனியர்களின் இலாக்காக்களும் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். கட்சி தாண்டி திரைத்துறையிலும் உதயநிதி தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகியும் , நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. மீண்டும் வழங்குக..பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. மீண்டும் வழங்குக..பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

திமுகவினர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கையை விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் இரண்டாவது முறையாக திமுக தலைவர் ஸ்டாலினால் நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த மாதம் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினரும் அவரது ரசிகர் மன்றத்தினரும் பிரம்மாண்டமாக கொண்டாடினர். நலத்திட்ட உதவிகள் அன்னதானம் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என மாஸ் காட்டினர்.

அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி


அன்றிலிருந்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமலை இந்த கூட்டம் உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் ஆவதற்கான முன்னோட்டம் விரைவில் அவர் அமைச்சராக அறிவிக்கப்படுவார் என கூறினார். இதே போல அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மா. சுப்ரமணியன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி என்ற ஒரு தொகுதிக்குள் அவரது திறமை அடங்கிவிடக் கூடாது அமைச்சராகி தமிழகம் முழுவதும் அவர் பயணம் செய்ய வேண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என வெளிப்படையாக பேசினர்.

அமைச்சரவையில் இடம்

அமைச்சரவையில் இடம்

இதற்கு ஒரு படி மேலாக கௌதம் சிகாமணி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க வேண்டும் என பேசி வந்தார் உதயநிதி ஸ்டாலின் போன்று தொடர்ந்து பேசி வருகிறார்கள் எனக்கு அமைச்சர் பதவி தருவது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என கூறினார். இந்நிலையில் வரும் 14ந்தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி

திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்படுவார் என பேச்சுகள் எழுந்த நிலையில் அவர் அமைச்சராகவில்லை. இந்நிலையில் தற்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்படும் பேச்சுக்கள் தீவிரமடைந்து இருக்கிறது. கட்சியினரும் தொண்டர்களும் ஏன் சீனியர் அமைச்சர்களே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வருவதால் முதல்வர் ஸ்டாலின் அதற்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 14 அல்லது அதற்கு பிறகாக, குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலாகா மாற்றம்

இலாகா மாற்றம்

அது மட்டுமில்லாமல் சில மேலும் பல எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவியும் சில இலாக்களின் செயல்படாத அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அமைச்சர் பதவியில் அதிருப்தியில் இருக்கும் ஐ.பெரியசாமியின் துறையும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சிவி கணேசன், மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், சக்கரபாணி உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரின் துறைகளிலும் மாற்றம் இருக்கும் எனவும் அமைச்சரவை மாற்றத்திற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த பட்டியலானது வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

English summary
While the talk of Tamil Nadu Chief Minister Stalin's son and DMK Youth wing Secretary Udayanidhi Stalin becoming a minister is getting very serious again, there are reports that there will be a change in the cabinet and the portfolios of some disaffected seniors may also be changed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X