இந்து மதம் ஒன்றிணைய கூடாது என சிலர் நினைக்கின்றனர்! திருமா-வெற்றிமாறனுக்கு இயக்குனர் மோகன் ஜி பதில்
சென்னை: ராஜராஜ சோழன் குறித்த பல்வேறு விவாதங்கள் தற்போது எழுந்துள்ள நிலையில், ‛‛இந்துக்கள் இந்து மதமாக ஒன்றிணைய கூடாது என சிலர் நினைக்கின்றனர்'' என்று திரைப்பட இயக்குனர் மோகன் ஜி பரபரப்பாக கூறியுள்ளார்.
‛‛பொன்னியின் செல்வன்'' படம் வெளியான நிலையில் ராஜராஜ சோழன் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் அனல் பறக்க நடந்து வருகிறது. குறிப்பாக ராஜ ராஜ சோழன் யார்? என்பது பற்றிய கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை கூறி வருகின்றனர்.
இதனால் தற்போது பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி மாறன் -கமல்ஹாசன் கருத்து
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் பேசினார். அப்போது "திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்" என பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. அதன்பிறகு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அளித்த பேட்டியில், முன்காலத்தில் சைவம், வைணவ சமயங்கள் மட்டுமே இருந்தது. வெள்ளைக்காரன்தான் இந்து மதம் என்ற பெயரை கொடுத்தான் எனக்கூறினார். இதனைத்தொடர்ந்து திருமாவளவன் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரை சைவ மற்றும் வைணவ சமய அறநிலையத்துறை என்று வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குனர் மோகன் ஜி பேட்டி
இந்நிலையில் தான் பழைய வண்ணாரபேட்டை, திரவுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி ராஜராஜ சோழன் குறித்த விவாதம் குறித்து பதிலளித்துள்ளார். ராஜராஜ சோழனை இந்து இல்லை எனக்கூறியவர்களை அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி மோகன் ஜி கூறியதாவது:

இந்துவாக ஒன்றிணைவார்கள் என அச்சம்
‛‛பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு தமிழர்கள் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் குறித்த வரலாறுகளை தேட தொடங்கி உள்ளனர். இந்த வரலாறு பற்றிய புரிதல் இருந்தால் பல விஷயங்களாய் பிரிந்துள்ள மக்கள் இந்துவாக அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சத்தை பொன்னியின் செல்வன் படம் தெரிஞ்சோ தெரியாமலோ ஏற்படுத்தி உள்ளது. இதனால் தான் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்து சமய அறநிலைத்துறை என்ற பெயரை யாராலும் மாற்ற முடியாது. யாரும் இந்து இல்லை என்று கூற முடியாது.

இந்து இல்லை என சொல்ல முடியாது
இந்து என்பது மதம் இல்லை. அது ஒரு நெறி. அது ஒரு வாழ்வியல் நெறி. இந்து என்பது இருக்கிறது என கமல்ஹாசன் இப்போது கூறியுள்ளார். இந்து இல்லை என யாரும் கூறமுடியாது. ஏனென்றால் என்னுடைய சான்றிதழில் மதம் என்பதில் இந்து என்றுதான் இருக்கிறது. இந்து மதம் இல்லை என்று சொல்கிறவர்களின் சான்றிதழ்களை வாங்கி பார்த்தால் கூட இந்து என்றுதான் இருக்கும்.

சுருக்கவிட முடியாது
ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் மட்டும் இருந்தது என கூற முடியாது. ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியக்கோவிலின் முன்பு பெருவடிவம் உள்ளது. அது கைலாய மலையின் வடிவமாகும். சீனாவில் அருகே உள்ள கைலாய மலை எப்படி இவர்களுக்கு தெரிந்தது. இவர்கள் பாரத தேசம் சுற்றி வந்தவர்கள். தெற்காசியாவை கட்டி ஆண்டவர்கள். இங்கு தான் இருந்தவர்கள் என சுருக்கிவிட முடியாது.

இந்து என சொல்வது தான் சரி
ராஜராஜ சோழன் காலத்தில் உள்ள சிற்பங்களில் கணபதியம் பற்றி கூறியிருக்கிறார். அதே போன்று பெருமாள், விஷ்ணு கோவில்களுக்கு நிதி, கொடை வழங்கியிருக்கிறார். இதனால் அவரை எப்படி ஒரு மதத்துக்குள் சுருக்கி விட முடியும். நான் கூறிய அத்தனை மதங்களையும் சேர்ந்தது தான் இந்து மதம், இந்து நெறி என்கிறோம். இதனால் அனைத்தையும் இணைத்து ராஜராஜ சோழனை இந்து என்று சொல்லுவதுதான் சரியாக இருக்கும்.

இந்துஸ்தான் என்ற பெயர்
ராஜராஜ சோழன் சைவம் என்றால் அதுபற்றி ஆதாரத்துடன் கூற வேண்டும். வெள்ளைக்காரர்கள் தான் இந்து என்ற பெயர் வைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் சங்க காலத்தில் இருந்தே இந்து என்ற பெயர் இருந்தது. 2000 ஆண்டுக்கு முன்பே இந்துஸ்தான் என்ற பெயரை பயன்படுத்தி உள்ளோம். இந்து என்ற வார்த்தை ராஜராஜ சோழனுக்கு நிச்சயம் பொருந்தும். இன்றைய காலகட்டத்தில் இந்து மதம் ஒன்றிணைய கூடாது என்று திட்டமிட்டு ராஜராஜ சோழன் இந்து இல்லை என்ற விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். இன்று ஒற்றுமை உருவாகக்கூடாது என்பது தான் அஜென்டாவாக உள்ளது'' என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications