"சென்னை மக்களே உஷார்".. பலே திட்டத்துடன் உலா வரும் 'தீபாவளி திருடர்கள்'.. போலீஸ் எச்சரிக்கை!
சென்னை: தீபாவளியையொட்டி கடைப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அதை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு திருடர்கள் புகுந்துள்ளதாகவும் எனவே ஷாப்பிங் செய்யும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கும். பட்டாசு வெடிப்பது, புத்தாடைகள் அணிவது, தின்பண்டங்கள் செய்வது என மகிழ்ச்சியாக இந்த நாள் கொண்டாடப்படும்.
குறிப்பாக தீபாவளியில் அதிகம் பேர் புத்தாடைகள் வாங்குவதில்தான் ஆர்வம் காட்டுவர் என்று சொல்லலாம். இதேபோல் புது பொருட்கள் வாங்கவும் ஆர்வம் காட்டுவர்.

நெருங்கும் தீபாவளி
இதன் காரணமாக பல ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சென்னையை எடுத்துக்கொண்டால் தி நகர், புரசைவாக்கம், பாரீஸ் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் தற்போது தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தற்போதில் இருந்தே மேற்கண்ட இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபட கொள்ளையர்களும் பலே திட்டங்களை வகுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

படையெடுக்கும் மக்கள் கூட்டம்
குறிப்பாக இது போன்ற இடங்களில் மக்களோடு மக்களாக கொள்ளையர்களும் கலந்துகொண்டு வாடிக்கையாளர்கள் போலவே சென்று ஹேண்ட் பேக்குகள், பர்ஸ்கள், செல்போன்கள் மற்றும் கழுத்தில், கைகளில் அணிந்திருக்கும் நகைகளை பறிக்க திட்டமிட்டுள்ளனர் என்றும்.. இதற்காக ஆந்திராவில் இருந்து 300 பேர் சென்னைக்குள் புகுந்துள்ளதாகவும் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்குள் புகுந்த திருடர்கள்
மேலும் கூறுகையில், 'ஆந்திர பிரதேசத்தில் இருந்து சென்னைக்குள் புகுந்துள்ள இந்த நபர்கள் டிப்-டாப் உடையணிந்து கடைகள் மற்றும் வணிக பகுதிகளுக்கு செல்லும் மக்களோடு மக்களாக இணைந்து இத்தகைய திருட்டில் ஈடுபடுவர். கடைத்தெருவில் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் இத்தகைய திருட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
சமீபத்தில் தி நகரில் மாலை நேரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிறுமி ஒருவரின் செயினை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றுள்ளார். இதேபோன்று கூட்ட நெரிசல் மிக்க கடைத்தெருக்களில் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும்.. இதுபோன்ற திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க போலீசாரும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திட்டமிட்டு திருட்டில் ஈடுபடுகின்றனர்
இதேபோல் இந்த திருட்டில் ஈடுபடுவதற்காக அவர்கள் பலே திட்டங்களை முன்கூட்டியே பிளான் போட்டு வைத்துள்ளனர். ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் இதற்காக திட்டமிட்டு சென்னை எழும்பூர், செண்டிரல் அருகே உள்ள லாட்ஜ்களில் ரூம் எடுத்து தங்கிக்கொண்டு அங்கிருந்து மக்கள் கூட்டம் எங்கு எங்கு இருக்கிறதோ அங்கு சென்று திருட்டில் ஈடுபட திட்டமிடுகின்றனர்.

தீபாவளியை குறி வைத்து
vதற்போது போலீசார் இதனை கண்டறிந்ததால் உஷாரான திருடர்கள் தங்களது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு சென்னையின் கேளம்பாக்கம், சிறுசேரி, பனையூர் மற்றும் மதுரவாயல் பகுதியில் பதுங்கி உள்ளனர். எனினும் போலீசாரும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். இவ்வாறு தீபாவளியை குறி வைத்து திருடர்கள் பல பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

போலீசார் குவிப்பு
ஒரு திட்டம் தோல்வியில் முடிந்தால் உடனடியாக வேறு ஒரு திட்டத்தை செயல்படுத்தி திருட்டு கும்பலினர் இது போன்ற பிட்பாக்கெட், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். தீபாவளி திருட்டில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் மிகுந்த கவனமுடனும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். திருட்டு சம்பவங்களை தடுக்க திநகர், வண்னாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பாரீஸ் உள்ளிட மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்'' என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications