ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி இல்ல “மோடிக்கு சிம்மசொப்பனம்”! அதிமுகவுக்கு கொள்கையே கிடையாது- விளாசிய உதயநிதி!
சென்னை : மோடி அவர்களே.. நீங்கள் நினைப்பது போல இது எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி. என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேசியுள்ளார்.
ஒவ்வொரு முறை மாநில உரிமையைப் பறிக்கும்போதும் அதற்கு எதிராக குரல் கொடுத்து இந்தியாவிலேயே மோடிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் என உதயநிதி பேசியுள்ளார்.
2919 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகமும் எப்படி பாஜகவை நிராகரித்ததோ, அதேபோல வரும் தேர்தலிலும் தமிழக மக்கள், பாஜகவை முற்றிலுமாக நிராகரிப்பார்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திராவிட மாடல்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் ஆலந்தூர் அருகே, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். திமுக எம்.பி டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் திராவிட மாடல் ஆட்சி பற்றி உரையாற்றீனர்.

முடிவல்ல, இதுதான் ஆரம்பம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "பயிற்சி பாசறையை திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 5ஆம் தேதி ஆரம்பித்தோம். முதலில் மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் என ஆரம்பித்தோம். பின்னர் தொகுதிக்கு ஒன்று என ஆரம்பிக்க தலைவர் உத்தரவிட்டார். இன்று நடந்தது கடைசி கூட்டம். இது முடிவல்ல இது தான் ஆரம்பம். நமது தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக பொதுக்குழுவிலேயே பயிற்சி பாசறை குறித்து வாழ்த்திப் பேசினார். 234 தொகுதிகளில் 270 பயிற்சி பாசறை நடத்தி உள்ளோம். திராவிட மாடல் பயிற்சி பாசறை 2.0 தொடங்க வேண்டும்.

இல்லந்தோறும் இளைஞரணி
பயிற்சி பாசறை மூலமாக 2 லட்சம் இளைஞர்களை நாம் அணுகி இருக்கிறோம். 50 லட்சம் இளைஞர்களை நான் இந்த 3 மாதத்தில் இளைஞரணியில் சேர்த்திருக்கிறேன் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் சொன்னார். அதில் ஒரு சிறிய திருத்தம். தலைவர் கொடுத்த இலக்கு 30 லட்சம். நாம் இலக்கை அடைந்துவிட்டோம் என நினைத்தோம். சரிபார்க்கும்போது தான் தெரிந்தது, நிறைய இறந்து போனவர்கள் பெயர்களை எல்லாம் சேர்த்திருக்கிறோம் என்று. 25 லட்சம் உறுப்பினர்கள் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்போது இல்லந்தோறும் இளைஞரணி என்ற முயற்சியை தொடங்கியுள்ளோம். வீடுதோறும் போய் இளைஞர்களை கழகத்தில் சேர்க்கும் பணியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம்.

வெற்றிக்கு நான் காரணமல்ல
இங்கே பேசியவர்கள் சொன்னார்கள், நாடாளுமன்ற தேர்தலிலே நான் பிரச்சாரம் செய்ததால் வெற்றி பெற்றோம் என்று. மன்னிக்கவும் அதற்கு நான் காரணம் அல்ல, வெற்றிக்கெல்லாம் ஒரே காரணம் கலைஞர் கருணாநிதி. அவர் வழியில் வந்த நமது தலைவர். அந்த வெற்றி கண்டிப்பாக தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இது ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி அல்ல
பிரதமர் மோடி இங்கு வரும்போது தமிழில் பேசுவார், திருக்குறள் சொல்வார். ஆனால், மோடி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை, இந்தியை திணிக்கவே முயற்சி செய்கிறார். மோடி அவர்களே.. நீங்கள் நினைப்பது மாதிரி இது எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி.

சிம்ம சொப்பனம்
இப்போது காசியில் தமிழ் சங்கமம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. மோடியின் முகத்திரையை கிழித்து, ஒவ்வொரு முறை மாநில உரிமையைப் பறிக்கும்போதும் அதற்கு எதிராக குரல் கொடுத்து இந்தியாவிலேயே மோடிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதிமுகவுக்கு கொள்கையே கிடையாது
2919 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகமும் எப்படி பாஜகவை நிராகரித்ததோ, அதேபோல வரும் தேர்தலிலும் தமிழக மக்கள், பாஜகவை முற்றிலுமாக நிராகரிப்பார்கள். திமுக மட்டும் தான் பயிற்சி பாசறை நடத்த முடியும் அதிமுகவால் நடத்த முடியாது. அதிமுகவுக்கு கொள்கையே கிடையாது. நம்முடைய கட்சிக்கு மட்டும்தான் வரலாறு இருக்கிறது" எனப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications