எமகண்டத்தில் வெள்ளை அறிக்கை... ராகுகாலத்திற்கு முன் பட்ஜெட் உரை வாசித்த பிடிஆர் பழனிவேல் ராஜன்
பிரதமை நாளில் சரியான எமகண்ட நேரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் இன்று வெள்ளிக்கிழமை நல்ல நேரத்தில் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார்.
சென்னை: வெள்ளிக்கிழமை பஞ்சமி திதியான இன்று ராகுகாலத்திற்கு முன்பு நல்ல நேரத்தில் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன். ராகுகாலம் எமகண்டத்தில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். எமகண்ட நேரத்தில் வெள்ளை அறிக்கை வாசித்த நிதியமைச்சர் இன்று சட்டசபையில் நல்ல நேரத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
எந்த ஒரு நல்லகாரியம் செய்வதற்கு முன்பாகவும் நாள் நட்சத்திரம் நேரம் காலம் பார்ப்பது வழக்கம். அமாவாசை, பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதி அதனை பாட்டிமை என்றும் கூறுவார்கள். அந்த நாளில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். அஷ்டமி, நவமி திதி நாட்களில் நல்ல காரியங்கள் செய்ய மாட்டார்கள். இதே போல ராகுகாலம், எமகண்டம், குளிகை நேரத்திலும் நல்ல காரியங்கள் செய்ய மாட்டார்கள். காரணம் இந்த நேரத்தில் மேற்கொள்ளும் காரியம் ஜெயிக்காது என்ற நம்பிக்கையும் உள்ளது.
அமாவாசைக்குப் பிறகு ஐந்தாம் நாள் பஞ்சமி திதி. இன்று வளர்பிறை பஞ்சமி நாள். சிறப்பான நாளான இன்று அனைத்து சுபகாரியங்களையும் செய்யலாம். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. இன்றைய தினம் நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது.

முதல் பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டசபையில் இன்று தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன். வெள்ளிக்கிழமை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலமாகும். காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை நல்ல நேரமாகும். எனவே ராகுகாலத்திற்கு முன்பாகவே நல்ல நேரத்திலேயே பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்து நல்ல நேரத்தில் முடித்து விட்டார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன். நல்ல நேரத்தில் காரியத்தை தொடங்கி விட்டாலே போதும் இடைப்பட்ட நேரத்தில் ராகுகாலம் வந்தால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

வெள்ளை அறிக்கை
ஆடி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியன்று சரியான எமகண்ட நேரத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன். பிரதமை தினத்தில் போர் பிரகடனம் செய்யவோ, கோமாதா என்றழைக்ககூடிய பசு வாங்கவோ உகந்த நாளாகும்.

விஷ நேரங்கள்
ஜாதகத்தில் ராகு, கேது என்பது சர்ப்பங்களுக்கு சம்பந்தப்பட்டவை என்பதால், அது விஷ காலமாக கருதப்படுகிறது. ஆகவே, அது சுபகாரியங்களுக்கு ஏற்ற காலமாக கருதப்படவில்லை, அந்தக் காலத்தை ஒதுக்கி வைத்தார்கள். நம் மனம் என்பது சந்திரனைக் குறிப்பதால் ராகு, எமகண்ட காலங்களில் அதன் தாக்கம் அவ்வளவு சரியாக இயங்காது. அதாவது கிரகண காலங்கள் என்று சொல்லக்கூடிய ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய சூரிய, சந்திர கிரகண காலங்களில் அதன் ஒளியானது தடைப்பட்டு, நம் ஆத்மாவுக்கும், மனதுக்கும் சரிவர கிடைகாத காரணத்தால் நம் ஆத்மா என்று சொல்லக்கூடிய இதயமும், மனம் சிந்தனை ஆகியவற்றைச் செயல்படுத்தும் மூளையும் இயல்பான கதியில் இருந்து சற்று மாறுபட்டு இயங்குவதால், அதற்கு உண்டான தினப்படியான காலத்தையும் சுபகாரியங்களுக்கு ஒதுக்கி வைக்கும்படி சொன்னார்கள்.

ராகுகாலம் கெட்ட நேரமா
தினசரி செய்யும் காரியங்களுக்கு ராகுகாலம் எமகண்டம் பார்க்கத் தேவையில்லை. அதே நேரத்தில் புதிதாக ஒரு முயற்சியில் இறங்கும்போது ராகுகாலம், எமகண்டம் தவிர்த்து நல்ல நேரம் பார்த்துச் செய்வது நல்லது. ஆனால், தவிர்க்க முடியாத பட்சத்தில், ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது விஷ்ணு துர்க்கையை மனதிற்குள் பிரார்த்தனை செய்துகொண்டு காரியத்தை தொடங்கலாம் என ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் செய்யக்கூடிய காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
Recommended Video

நல்லநாளில் நல்ல காரியம்
நம் ஊரில் செவ்வாய்கிழமை நல்ல நாள் என்று சொல்வது போல மேல் நாட்டினர் 13ஆம் தேதியை கெட்ட நாள் என கருதுகின்றனர். அத்துடன் அதோடு வெள்ளிக்கிழமை அன்று 13ஆம் தேதி வந்தால் அது அபாயமான நாள் என பலரும் பயந்து வருகின்றனர். ஆனால் காலத்தின் சுழற்சியில் இந்த 13ஆம் தேதியுடன் வெள்ளிக்கிழமை வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இன்றைய கிழமை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 13ஆம் தேதி நாக பஞ்சமி நாளில் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சரின் நம்பிக்கை
திமுகவினர் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதில்லை. அதே நேரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. அதன் அடிப்படையில்தான் இன்றைய தினம் நல்ல நேரத்தில் நிதிநிலை அறிக்கையை வாசித்து பல நல்ல அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications