பொங்கல் பரிசு பொருட்கள் தரமில்லையென புகார்.. உடனே ஆக்ஷன் எடுத்த ஸ்டாலின்.. அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழக்கங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் இந்த பொருட்கள் வழங்கப்படுகின்றன.
Recommended Video
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பொங்கல் பரிசு தொகுப்பு
இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் வழங்கப்படும் தேதி குறிப்பிடபட்டு இருக்கும். அந்த நாளில் சென்று பொருட்கள் வாங்கி கொள்ளலாம். தற்போது கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலேயே டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பொருட்கள் தரமாக இல்லை என்று புகார்
இதற்கிடையே சில இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமாக இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக சட்டமன்றத்திலும் அதிமுக புகார் கூறியது. பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமாக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக குற்றம்சாட்டினார்.

முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் அனைவருக்கும் தரமான பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அதிகாரிகளும், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள குழுவினரும் தரமான பொருள் மக்களுக்கு கிடைக்கிறதா? என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் அறிவுறுத்தல்
மேலும், மாவட்ட கலெக்டர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் தரமான பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும். இதில் தவறு செய்பவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications