சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ரெடியா இருங்க".. பள்ளிகள் திறப்பா?.. செந்தில் பாலாஜி போட்ட ஒரே உத்தரவு.. களம் இறங்கிய அதிகாரிகள்

பள்ளிக்கல்வித் துறை புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தினம் தினம் நம்மை கதிகலங்க வைத்து வருகிறது கொரோனா தொற்று.. இந்த நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி விடுத்துள்ள அறிவிப்பு மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த 2-வது அலை இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஒவ்வொரு ஆஸ்பத்திரியும் நிறைந்து வழிந்து கொண்டிருக்கிறது.

தினம் தினம் 30 ஆயிரத்துக்கு குறையாமல் தமிழக மக்களை பாதித்து வருகிறது இந்த வைரஸ் தொற்று.. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பெரும்போராடி வருகின்றன

சொன்னார், சொன்னபடி தரமான சம்பவம் செய்தார்.. சபாஷ் வாங்கிய செந்தில் பாலாஜி..காத்திருக்கிறது சிறப்பு! சொன்னார், சொன்னபடி தரமான சம்பவம் செய்தார்.. சபாஷ் வாங்கிய செந்தில் பாலாஜி..காத்திருக்கிறது சிறப்பு!

ஸ்டாலின்

ஸ்டாலின்

முக ஸ்டாலின் மிக கடினமான சூழலில்தான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.. பதவியேற்புக்கு முன்பேயே, அதாவது கிட்டத்தட்ட ஒரு வாரமாகவே, கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைகளை கையில் எடுத்துவிட்டார்.. அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி கொண்டே இருந்தார்.. பதவியேற்ற பின்னர், தன்னுடைய நிர்வாகிகளுக்கு போட்ட முதல் உத்தரவு, அனைவரும் களத்தில் இறங்க வேண்டும் என்பதுதான்.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

அதன்படியே, நிர்வாகிகள், அமைச்சர்கள் கொரோனா குறித்த தடுப்பு நடவடிக்கைகளிலும், அதுசம்பந்தமான நேரடி ஆய்வுகளிலும் இறங்கி உள்ளனர்.. தொற்று என்றதுமே, இது சுகாதாரத்துறை சம்பந்தப்பட்டது என்று மட்டும் நினைத்து ஒதுக்கிட முடியாது.. போக்குவரத்து துறை முதல் அனைத்து துறைகளுமே ஒன்றிணைந்து கொரோனாவை விரட்டுவது என்ற முழக்கத்துடன் போராடி வருகின்றனர்.

ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

இதில் பள்ளிக்கல்வித்துறையும் ஒன்றாகும். இப்போதைக்கு கொரோனா தொற்று நோயாளிகளால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள், ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. அதனால், மாற்று ஏற்பாடுகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக, கோவிட்-19 சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது..

சிகிச்சை

சிகிச்சை

ஆனால் இந்த 10 நாட்களாகவே தொற்று தீவிரம் காரணமாக சிகிச்சை அளிக்கும் முகாம்களை ஏற்படுத்த பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது... குறிப்பாக சென்னை நகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

ஆசிரியர்களை மட்டும் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது... ஆனால், நிலைமை இப்போது மோசமாக உள்ளதால், அந்த யோசனையை கைவிட்டு, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.. அதுமட்டுமல்ல, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிக அளவிலான வகுப்பறைகள் உள்ளன.. இந்த வகுப்பறைகள் அனைத்தும் பெரிய அளவிலேயே இருக்கின்றன.. எனவே, இங்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தி சிகிச்சை அளித்தால் பேருதவியாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.

 மாநகராட்சி

மாநகராட்சி

இப்படி பள்ளிகளில் கடந்த வருடமும் ஏற்பாடு சென்னையில் செய்யப்பட்டிருந்தது.. அதுபோலவே, இப்போதும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது... அதனால், எந்த நேரத்திலும் பள்ளிகளை ஒப்படைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையும், மாநகராட்சியும் அறிவுறுத்தியுள்ளது.

English summary
TN Education dept orders to open schools for covid care centres
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X