5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர்
சென்னை: திமுக - விசிக இடையிலான தொகுதி பங்கீடே இன்னும் முடிவடையாத சூழலில், அக்கட்சிக்குள் புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல் அதிகரித்துள்ளது. அதேபோல் யாருக்கு சீட் கொடுத்தால், விசிக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதோ, அவர்களுக்கு தான் சீட் அளிக்கப்படும் என்பதில் திருமாவளவனும் தீர்மானமாக இருப்பதாக அக்கட்சியின் பேசுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 33 நாட்களே இருக்கும் நிலையில், திமுக உடனான தொகுதி பங்கீட்டை இன்னும் விசிக முடிக்கவில்லை. விசிகவுக்கு முதலில் 8 சீட்டுகளை கொடுக்க திமுக முடிவு செய்திருந்த சூழலில், திடீரென சிபிஎம் கட்சி 6 சீட்டுகளுக்கு பிடிவாதம் காட்டுவதால், முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுக்க தாமதமாகி வருகிறது. இருப்பினும் விசிகவுக்கு 7 சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இதன் காரணமாகவே திருமாவளவனை வீட்டிற்கு அழைத்து முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். ஸ்டாலின் நேரடியாக பேசி இருப்பதால், திருமாவளவனால் எந்த கோரிக்கையையும் கூடுதலாக வைக்க முடியவில்லை என்கின்றனர். கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 4ல் விசிக வெற்றிபெற்றது.
இந்த நிலையில் இம்முறை புதுமுகங்களுக்கும், பெண்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விசிகவில் குரல் எழுந்துள்ளது. மீண்டும் அதே வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று திருமாவளவனிடமே நேரடியாக பலரும் கூறத் தொடங்கியுள்ளனர். ஆனால் திருமாவளவன் தரப்பில் எல்லோரும் என்னிடம் சீட் கேட்கிறீர்கள்.. ஆனால் வெற்றிபெற வாய்ப்பு உள்ளவர்களுக்கு தான் சீட் கொடுக்கப்படும்.
தேர்தல் அரசியல் விசிக அடையும் ஒரேயொரு தோல்வி கூட நம்மை வெகு காலத்திற்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிடும். அதனால் கட்சியினர் என்னுடைய முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கூறி இருக்கிறார். சிட்டிங் எம்எல்ஏ-க்களில் 4 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
விசிகவுக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதியில் இம்முறை நாகை மற்றும் திருப்போரூர் தொகுதி மீண்டும் கிடைக்காது என்று தெரிகிறது. இருப்பினும் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு மற்றும் வன்னி அரசு ஆகியோருக்கு கிட்டத்தட்ட சீட் உறுதி என்று அக்கட்சியினர் சொல்லுகின்றனர்.
மீதமுள்ள தொகுதிகளில் தலித் எழில்மலையின் மகன் எழில் கரோலினுக்கு சீட் கிடைக்கும் என்று சிறுத்தைகள் கூறுகின்றனர். அதேபோல் ஒரு பெண்ணிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று விசிகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் விசிக தொகுதி பங்கீடு நிறைவடையும் பட்சத்தில், அடுத்த சில நாட்களில் விசிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
திருமாவிடம் அந்த கேள்வியை.. தனியாக போன் போட்டு கேட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? இவ்வளவு நடக்குதா? -
பாலில் விழுந்த மாம்பழம்.. அன்புமணி கைக்கு மொத்தமாய் போன பாமக! வலை போட்டு வேட்பாளர்களை தேடும் அய்யா! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ












Click it and Unblock the Notifications