5.67 கோடி வாக்காளர் இறுதி லிஸ்ட் வெளியீடு: 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு: தலைமை தேர்தல் அதிகாரி
சென்னை: தமிழகத்தில் ஜனநாயகத் திருவிழாவின் மிக முக்கியமான அங்கமான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.. தேர்தல் ஆணையத்தின் முறையான அறிவிப்பை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் துல்லியமான விவரங்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு இன்று மக்கள் பார்வைக்கு வந்துள்ளது.. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியான நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்கள் இறுதி பட்டியலை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் என அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் நோக்கில், கடந்த நவம்பர் 4ம் தேதி சிறப்பு சார் எனப்படும் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டன..

தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு
இதற்கு முன்னதாக பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட சில குழப்பங்களைத் தொடர்ந்து, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இத்தகைய தீவிர திருத்தங்களை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது..
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, முதற்கட்ட சரிபார்ப்புக்கு பிறகு 5.43 கோடியாகக் குறைந்தது.. அதாவது, இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் பெயர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன..
விடுபட்டவர்கள் பெயர்
இந்த வரைவுப் பட்டியல் கடந்த டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் பிப்ரவரி 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.. இந்த இடைப்பட்ட காலத்தில் புதிய பெயர்களை சேர்க்கவும், பிழைகளை திருத்தவும் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.. நேரடியாகவும் இணையதளம் வழியாகவும் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 ஆக இருந்தது..
குறிப்பாக, நிரந்தரமாகக் குடிபெயர்ந்ததாகக் கருதப்பட்ட 66 லட்சம் பேரில், சுமார் 23 லட்சம் பேர் மீண்டும் தங்கள் பெயர்களைப் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
இறுதி வாக்காளர் பட்டியல்
மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த விண்ணப்பங்களை அந்தந்த பகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கள ஆய்வு செய்து, தகுதியானவர்களின் பெயர்களைப் பட்டியலில் இணைக்கும் பணியை அண்மையில் நிறைவு செய்தனர்.. மாவட்ட வாரியாக இறுதி செய்யப்பட்ட இந்தப் பட்டியல்கள் இன்று முதல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகிறது..
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் ஒரு மைல்கல்லாக இந்த வெளியீடு அமைந்துள்ளது
தமிழக தேர்தல் அதிகாரி
இந்நிலையில், மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று பிற்பகல் வெளியிட்டார்.. இறுதி பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.. பொதுமக்கள் இணையதளம் மூலம் தங்கள் பெயரை சரிபார்க்கலாம் என்றும், விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க இப்போதுகூட விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925, பெண் வாக்காளர்கள் - 2,89,60,838, மூன்றாம் பாலினம் - 7,617. பேரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை இன்று முதல் இணையதளம் மூலமாகவும் உறுதி செய்து கொள்ளலாம்.. ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்தும் இந்த முக்கிய ஆவணம், தமிழகத்தின் எதிர்காலத் தேர்தல்களுக்கு மிக முக்கியமான அடித்தளமாக அமையப்போகிறது.. ஒவ்வொரு குடிமகனும் இந்தப் பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது அவசியமான கடமையாகும்..
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications