சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு.. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் கொரோனா டெஸ்ட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புது கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவி வருகிறது.. ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய இது என்கிறார்கள்.. இந்த புதிய கொரோனா வைரஸுக்கு VUI 202012/1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை 39,237 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Gov advices RTPCR test for those who return from Britain

இந்த புதிய வகை கொரோனா வேகமெடுத்து பரவும் என்பதால், இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன... உலகின் பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.. அதேபோல, சாலைவழி போக்குவரத்தும் மூடப்பட்டுள்ளன.. இதன் எதிரொலியாக இந்தியாவும் டிசம்பர் 31-ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மேலும், பிரிட்டனில் இருந்து மற்றும் பிரிட்டன் வழியாக இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது... தமிழகத்தை பொறுத்தவரை, இங்கிலாந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர் தங்களது பயணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர் ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனிலிருந்து நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை தமிழகம் வந்தவர்கள் பொது சுகாதாரத்துறை மூலமாகவோ அல்லது தாமாக முன்வந்து ஆர்டிபிசிஆர் (RTPCR) கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

English summary
TN Gov advices RTPCR test for those who return from Britain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X