விவசாயிகளுக்கு குட் நியூஸ்..சம்பா நெற்பயிருக்கு காப்பீடு..நவ.21 வரை கால அவகாசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயிர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் முதலமைச்சர் 2022-23ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 இலட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 இலட்சம் ஏக்கர் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

TN government extended insure crops in 27 districts on Nov 21

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 15 என அறிவிக்கப்பட்டிருந்தது.

பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், pmfby.gov.in என்ற இணையதளத்தில் "விவசாயிகள் கார்னர்" எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு விவசாயிகளின் நிதிச்சுமையினை பெருமளவு குறைக்கும் வகையில், காப்பீட்டுக் கட்டணத் தொகையில் பெரும்பங்கு மாநில அரசும், ஒன்றிய அரசும் செலுத்திவிடும் என்பதால், விவசாயிகள் சம்பா நெல், மக்காச்சோளத்துக்கு காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதத் தொகையையும், பருத்தி, வெங்காயத்துக்கு காப்பீட்டுத் தொகையில் 5 சதவீதத் தொகையையும் செலுத்தினால் போதுமானது. விவசாயிகளின் பங்களிப்புக் கட்டணத்தை செலுத்தியதற்கான இரசீதை பொதுச் சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புயல், வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது. ஆகையால், விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்களையோ அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அல்லது வங்கிகளையோ அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதே போல வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கால பாதிப்புகளை சமாளிக்க பயிர்க்காப்பீடு அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை இரு வாரங்களுக்கு, அதாவது நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயிர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+