சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ்... அரசாணை வெளியீடு

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை கணக்கிட புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது. 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தபோது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதில் விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டு பணியாற்றியதாக 'வெயிட்டேஜ்' கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

TN government issues a weightage for voluntary retired govt staffs

தற்போது ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 56 வயது மற்றும் அதற்கு கீழ் வயதில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றால் அவருக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

அதேபோல் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
As reported TN government GO , With the retirement age of civil servants being raised to 60, a new weightage has been released for optional retiring civil servants. Optional retirement at the age of 57 is 3 years, and optional retirement at the age of 59 is considered as 60 years of service and the monthly pension is calculated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X