சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அந்த" விஷயத்தை அழுத்தி சொன்ன ஆளுநர்.. மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை விடமாட்டோம்.. உரையில் உறுதி

மேகதாது அணை கட்ட அனுமதிக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அண்டை மாநிலங்களுடன் நல்லுறவில் இருக்க வேண்டும், ஆனால் அதே சமயம், நேரம் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அதேபோல முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது என்றும் ஆளுநர் உரையாற்றினார்.

ஒவ்வொரு வருட துவக்கத்திலும், தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையாற்றுவது என்பது மரபாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்கியது.. தமிழ்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கிய.. ஆளுநர் ரவி தன்னுடைய முதல் உரையை வாசித்தார்.

குழப்பத்தில் அமைச்சர் பொன்முடி! தர்ம சங்கடமான சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின்! என்ன பின்னணி? குழப்பத்தில் அமைச்சர் பொன்முடி! தர்ம சங்கடமான சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின்! என்ன பின்னணி?

 தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள்

அப்போது தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனைகள் குறித்தும் வாசிக்கப்பட்டது.. ஆளுநர் தன்னுடைய உரையில், "இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதில் தமிழக அரசு முனைப்புடன் உள்ளது, தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன' என்று தெரிவித்தார்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அதேபோல, தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, 2 அலையை தடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்த ஆளுநர், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது, அரசு எடுத்த நடவடிக்கைகளால் கரோனா உயிரிழப்புகள் தமிழகத்தில் குறைந்துள்ளது என்றும் முதல்வருக்கு புகழாரம் சூட்டினார். தொடர்ந்து தன்னுடைய உரையில் ஆளுநர் மிக முக்கியமான 2 விஷயங்களை பற்றி தெரிவித்தார்.

 மேகதாது

மேகதாது

அதன்படி, "சென்னை: மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது என்றும், முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது என்றும், சட்டப்பேரவையில் ஆளுநர் வலியுறுத்தி உள்ளது மிக மிகமுக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.

 கர்நாடக அரசு

கர்நாடக அரசு

அதாவது, அண்டை மாநிலங்களுடன் நல்லுறவில் இருக்க வேண்டும், அதே நேரம் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதையும் ஆளுநர் அழுத்தி சொல்லி உள்ளார்.. அதேபோல தமிழகத்தில் இரு மொழிக் கல்வி தொடரும் என்றும், இலங்கை சிறைகளில் உள்ள 68 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார்.

 விசிக வெளிநடப்பு

விசிக வெளிநடப்பு

ஆளுநர் தன்னுடைய உரையைத் தொடங்கியவுடனேயே அவையில் கூச்சலும், குழப்பமும் எழுந்தது. விசிக எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.. நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை கண்டித்து பேரவையில் இருந்து அவர்கள் விசிக எம்எல்ஏ க்கள் சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷானவாஸ், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

Recommended Video

    இன்றைய சட்டமன்றம் : ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
     அதிமுக

    அதிமுக

    தொடர்ந்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.. அதிமுகவின் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது, மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.. இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும் என தெரிகிறது.

    English summary
    TN Governor RN Ravi speech about Mullai periyar and Mekedatu dam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X