மகளிர் உரிமை தொகை ரூ.2000 இருக்கட்டும்.. நாளை வருது இன்னொரு மிகப்பெரிய அறிவிப்பு.. ரெடியான ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 2026-2027 நிதி ஆண்டிற்கான அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை (பிப்ரவரி 17) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மகளிர் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து முக்கிய நிதி உதவித் திட்டங்களை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை: அடுத்த அதிரடி
சமீபத்தில் மகளிர் உரிமைத் தொகையாக ₹5,000 வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மகளிருக்கான கூடுதல் நிதியுதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பட்ஜெட்டில்இல்லத்தரசிகளுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம். நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வரலாம். சிலிண்டர் வாங்குவதில் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக "பணம் சார்ந்த நேரடி உதவித் திட்டங்கள்" (Direct Benefit Transfer) மூலம் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைவதே அரசின் இலக்காக உள்ளது.
இளைஞர்கள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம்
இளைஞர் மற்றும் மாணவர் சமுதாயத்தை கவரும் வகையில் கல்வி சார்ந்த புதிய சலுகைகள் நாளை வெளியாக உள்ளன. குறிப்பாக:
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு.
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான புதிய கல்வி உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சிறு மற்றும் குறு தொழில்கள் தொடங்க இளைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள்.
சபாநாயகர் மு. அப்பாவு பேட்டி
முன்னதாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் மு. அப்பாவு, "நாளை காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பிப்ரவரி 20-ஆம் தேதி உபரி செலவினங்கள் மற்றும் முன்பண மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்," என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேரடி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் வசதிகள்
சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து பேசிய சபாநாயகர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பப்படி இது விரைவில் நடைமுறைக்கு வரும் என்றார்.
"தற்போது கேள்வி நேரம் மற்றும் அமைச்சர்களின் பதில்கள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. விரைவில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், பேரவையின் பழைய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் இதனை மக்கள் பார்க்கலாம்," என அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் உரைகள் நேரடி ஒளிபரப்பில் இருட்டடிப்பு செய்யப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த சபாநாயகர், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒதுக்கப்பட்ட நேரம் முழுமையாக ஒளிபரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தேர்தல் களத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் ஆளுங்கட்சியின் மிக முக்கியமான "துருப்புச் சீட்டாக" பார்க்கப்படுகிறது.
-
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications