சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. இந்த 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. தேர்தல் ஆணையம் உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஒயின், பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது டாஸ்மாக் பார் திறப்பதோ தடை செயப்பட்டுள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74 ஆயிரத்து 416 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

ஆடாமல் ஜெயிச்சுட்டோமே..போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்கள்..நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ட்விஸ்ட்ஆடாமல் ஜெயிச்சுட்டோமே..போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்கள்..நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ட்விஸ்ட்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கி ஏற்கனவே நிறைவு பெற்றது.

தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

இதனை தொடர்ந்து தற்போது திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பாஜக சார்பில் அண்ணாமலை ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது.

இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சில தினங்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வருகிற 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூடமாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 மதுவிற்க தடை

மதுவிற்க தடை

தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணும் நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், ஒயின், பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது டாஸ்மாக் பார் திறப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.

English summary
The State Election Commission has ordered the closure of Tasmac stores in Tamil Nadu from the 17th to the 19th of this month in the run up to the urban local body elections. Similarly, Tasmac stores have been ordered to close on the 22nd this month
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X