உன்னால் முடியும்... நீ சாதிப்பாய்! தடைகளை தகர்ப்பது நமது பிறவி குணம்.. தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தடைகளை தகர்த்து வெற்றி பெறுவோம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் நிறை வடைந்து, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பரப்புரை என்ற அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறோம். களத்தில் இருப்பை உறுதி செய்துள்ள நாம், அடுத்து வெற்றிகளை அறுவடை செய்வதற்கான சாகுபடி காலம் தான் இந்த பரப்புரை காலம் ஆகும்.

உன்னால் முடியும்... நீ சாதிப்பாய்
''உன்னால் முடியும்... நீ சாதிப்பாய்'' என்ற உண்மையை உனக்கு உணர்த்துவதற்காகத் தான் எனது உயிரினும் மேலான பாட்டாளிகளுக்கு இந்த மடலை வரைகிறேன். நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை விட உள்ளாட்சி ஜனநாயகம் தான் மிகவும் வலிமையானது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது.

ஆளும் கட்சிகளின் குறுக்கு வழி
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, வாக்குப்பெட்டிகளை மாற்றுவது, வெற்றி பெற்ற வேட்பாளரை தோல்வியடைந்ததாகவும், தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாகவும் அறிவிப்பது போன்ற ஜனநாயகப் படுகொலைகள் பலமுறை நடந்துள்ளன. இப்படி செய்வதன் மூலம் தமிழகத்தை ஆளும் கட்சிகள் தங்கள் வலிமையை குறுக்கு வழியில் நிரூபிக்கும்.

சந்திக்காத அடக்குமுறைகள் எதுவுமில்லை
வேட்பாளர்களை பணத்தால் அடிக்கும் வித்தையும் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. தங்களின் செல்வாக்கு மீதும், மக்கள் மீதும் நம்பிக்கையற்றோர் நடத்தும் இத்தகைய தாக்குதல்களில் ஜனநாயகம் தப்பிப்பிழைக்குமா? என்ற ஐயம் எழுந்திருக்கிறது. ஆனால், இந்த அடக்கு முறைகளுக்கு அப்பாற்பட்ட கட்சி தான் பாட்டாளி மக்கள் கட்சி. சமூகநீதிக்காக 1980-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், 1989-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி பா.ம.க. தொடங்கப்படும் வரை, சந்திக்காத அடக்குமுறைகள் எதுவுமில்லை.

சில பதர்களும் இருப்பது வாடிக்கை தானே
நன்கு முற்றிய நெல் மணிகளுக்கு நடுவே தவிர்க்கவே முடியாத சில பதர்களும் இருப்பது வாடிக்கை தானே. நம்மிலும் பல பதர்கள் உள்ளன. அதை நானும் நன்றாக அறிவேன். அத்தகைய பதர்களுக்கு கட்சியில் இடமில்லை. கட்சிக்கு துரோகம் செய்த சிறுநரிகளுக்கும் கட்சியில் இடமில்லை. சிங்கங்களும், சிறுநரிகளும் ஒன்றாக வாழ முடியாது; நெல்மணிகளின் மூட்டையில் பதர்களுக்கு இடமில்லை.
நெல்மணிகளை புடைக்கும் போது பதர்கள் பறந்து போய்விடும். சிறுநரிகளின் முகத்திரை விலகும் போது அவற்றை சிங்கங்கள் விரட்டியடித்து விடும். இவை அனைத்தும் இன்னும் சில நாட்களில் செய்து முடிக்கப்பட்டுவிடும்.

நீ செய்ய வேண்டியது இதுதான்
இந்தப் பணிகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டியது கட்சித் தலைமையின் பணி. அதை கட்சித் தலைமை கவனித்துக் கொள்ளும். பாட்டாளியான நீ செய்ய வேண்டியது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நமது வேட்பாளர்களின் வெற்றிகளை உறுதி செய்ய உழைப்பது தான். உள்ளூர் மக்களின் தேவைகள் என்ன? என்ப தும், அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் உனக்குத் தெரியும். அவற்றை மக்களிடம் எடுத்துக் கூறினாலே, அவர்களின் ஆதரவைப்பெற்று வெற்றியைக் கைப்பற்றி விட முடியும்.

முதன்முதலில் குரல் கொடுப்பது நாம்தான்
பா.ம.க.தான் மக்கள் பிரச்சினைகளுக்கான முதன்முதலில் குரல் கொடுக்கும் கட்சி என்ற உண்மையையும், பாட்டாளி மக்கள் கட்சியால் தான் மக்கள் நலன் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கின்றன என்பதையும் மக்களிடம் எடுத்துக் கூறி மாம்பழத்திற்கு வாக்கு கேளுங்கள்.
தடைகளை தகர்ப்பதும், அடக்குமுறைகளை உடைப்பதும் நமது பிறவி குணங்கள். எனவே, அனைத்து முட்டுக்கட்டைகளையும் நொறுக்கித் தள்ளி மக்களிடம் செல்லுங்கள்... அவர்களின் மனங்களை வெல்லுங்கள்... மாம்பழம் சின்னத்தில் வாக்குகளை அள்ளுங்கள். நகர்ப்புறங்களும் நமதே என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் பணியாற்றும்படி பாட்டாளி சொந்தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கடிதத்தில் கூறியுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications