பள்ளிகள் நாளை திறப்பு..ஒரு வாரத்திற்கு புத்துணர்வு பயிற்சி, உளவியல் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தல்
பள்ளிகளில் ஒரு வாரத்திற்கு பாடங்கள் நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளில் ஒரு வாரத்திற்கு பாடங்கள் நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிகத்தில் கோடை விடுமுறை முடிந்ததையடுத்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் மீண்டும் கொரோனா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர்கள் இடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் திட்டமிட்டபடி அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

கொரோனா பரவல் அச்சம்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2020,2021ஆம் ஆண்டுகளில் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் சரியாக இயங்கவில்லை. கடந்த ஆண்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன. நேரடி வகுப்புகள் அனைத்தும் நவம்பர் மாதமே நடைபெற்றது.

பள்ளிகள் திறப்பு
7 மாதங்கள் மட்டுமே பள்ளிகள் நடைபெற்றாலும் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. 9ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து தமிழகத்தில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து வரும் 20-ம் தேதி +2 வகுப்புகளும், 27-ம் தேதி +1 வகுப்புகளும் தொடங்க உள்ளது.

ஒரு வாரத்திற்கு உளவியல் வகுப்புகள்
இந்நிலையில் பள்ளிகளில் ஒரு வாரத்திற்கு பாடங்கள் நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து காலை 9.10 முதல் மாலை 4.10 வரை பள்ளிகள் செயல்படுவதற்கான மாதிரி நேரத்தை வெளியிட்டதோடு, 8 பாடவேளை கொண்டதாக பள்ளிகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Recommended Video

வகுப்புகள் தொடங்கும் நேரம்
அதே நேரத்தில் பள்ளிகளின் அமைவிடம் மற்றும் போக்குவரத்து வசதி உள்ளீடற்றவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே மேலாண்மை குழுக்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications