TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் குளறுபடி? நேற்று காலை 9 மணிக்கு நடந்தது என்ன?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு விடிய விடிய கஷ்டப்பட்டு படித்த நிலையில் அந்த தேர்வு ரத்தானதால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு விவகாரத்தில் என்னதான் நடந்தது என்பதை பார்க்கலாம்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அலுவலக உதவியாளர், விஏஓ முதல் வட்டாட்சியர், கோட்டாட்சியர், சார் ஆட்சியர் வரையிலான பதவிகளுக்கு தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

அந்த வகையில் குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய பணிகளுக்கான ஆரம்ப கட்ட தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த தேர்வில் தேர்ச்சியானவர்கள் முதன்மை தேர்வு எழுத தகுதியானவர்கள். இதனால் முதன்மைத் தேர்வுக்காக தேர்வர்கள் ராத்திரி பகலாக கஷ்டப்பட்டு கண் விழித்து படித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் பிப்ரவரி 8ஆம்தேதி முதன்மை தேர்வு நடத்தப்படும் என சொல்லப்பட்ட நிலையில் தேர்வுக்காக நிறைய பேர் தயாராகி வந்தனர். நேற்றைய தினம் தேர்வு நாளும் வந்துவிட்டது! ஆசை ஆசையாக தேர்வு எழுத சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது நிர்வாகக் குளறுபடிகளால் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் தேர்வர்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்தனர். ஒருவருக்கொருவர் "என்ன ஆச்சு, ஏன் திடீர்னு" என சக தேர்வர்களிடம் வினவினர். காலை 9 மணிக்கு தேர்வு தொடங்க வேண்டிய நிலையில் அன்றைய தினம் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 1000 பேர் தேர்வு எழுத வந்தனர். ஆனால் அங்கு வெறும் 300 பேருக்கு மட்டுமே seating வசதி செய்யப்பட்டிருந்தது. ஹால் டிக்கெட்டில் இருந்த பதிவெண்கள் தேர்வு அறையில் ஒட்டப்படவில்லை.
இதனால் அங்கிருந்த தேர்வு நடத்தும் குழுவிடம் தேர்வர்கள் கேட்டபோது, "உங்கள் தேர்வு எண் இங்கு இல்லை, அந்த காலேஜுக்கு போங்க, இந்த காலேஜுக்கு போங்க என அதிகாரிகள் தெரிவித்த போது தேர்வர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அதிலும் அரும்பாக்கத்தில் இருந்து அவர்கள் கூறும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். சில தேர்வு மையங்களில் போதிய வினாத்தாள்கள், தேர்வர்களுக்கு வழங்கப்படவில்லை. தேர்வர்களின் எண்ணிக்கைகேற்ப வினாத்தாள்கள் அனுப்பப்படவில்லை.
இதனால் பொறுமையை இழந்த தேர்வர்கள் அரும்பாக்கம் கல்லூரி அமைந்திருக்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதனால் முதலில் சென்னையில் மட்டும் தேர்வுகள் ரத்து என அறிவிக்கப்பட்ட நிலையில் பிறகு மாநிலம் முழுவதும் 38 மையங்களிலும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேர்வாணையம் அறிவித்தது. இதனால் தேர்வர்கள் அப்செட் ஆகிவிட்டனர்.
விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும், புதிய ஹால் டிக்கெட்டும் அனுப்பப்படும் என சொல்லப்படுகிறது. இப்படியாக ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக நடந்த இந்த தேர்வு குளறுபடியால் கஷ்டப்பட்டு படித்தும் அதை பயன்படுத்த முடியவில்லையே என மன உளைச்சலில் உள்ளனர். ஆனால் கல்விச் செல்வம் என்பது அழிக்க முடியாதது. படித்தது நம் மூளைக்குள் பத்திரமாக இருக்கும் என்பதை நினைவில் கொண்டு தேர்வுக்கு படிக்க இன்னும் சில காலம் கிடைத்துள்ளது என்று பாசிட்டிவாக நினைத்து தேர்வர்கள் படிக்க வேண்டும் என தனியார் தேர்வு அகாதெமி நடத்துவோர் ஊக்கம் கொடுத்து வருகிறார்கள்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்












Click it and Unblock the Notifications