யாரெல்லாம் ஜூலை 31-க்கு பிறகு வருமான வரியை தாக்கல் செய்யலாம்? ஐடிஆர் தாக்கல் செய்ய இன்றே கடைசி
சென்னை: ஆண்டு வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கு ஜூலை 31ஆம் தேதியான இன்றே கடைசி நாளாகும்... இன்றைக்குள் வருமான வரியை தாக்கல் செய்யாவிட்டால் என்னாகும்? ஜூலை 31-க்கு பிறகு யாரெல்லாம் வருமான வரித் தாக்கல் செய்யலாம் தெரியுமா?
கடந்த மார்ச் மாதத்தோடு வருட இறுதிக்கணக்கு முடிவடைந்த நிலையில் 2023-2024 ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது... இதற்காக வழக்கம்போலவே, ஜூலை 31ம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்திருந்தது..

அரசு ஊழியர்கள்: இதையடுத்து, அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் கடந்த சில நாட்களாகவே வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருகிறார்கள்.. இன்றுடன் கடைசி நாள் என்பதால், எல்லாருமே உடனடியாக வருமான வரித்தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த வருடம் ஜூலை 25ம் தேதி சுமாா் 4 கோடி போ் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இந்த முறை, வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளதாக, நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் கூறியிருந்தார். அதேபோல, கடந்த வருடம், வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடியும்போது, சுமாா் 7.5 கோடி போ் தாக்கல் செய்தனா். ஆனால், இந்த முறை, இந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்றே தெரிகிறது.
அபராதம்: இன்று ஜூலை 31க்குள் வருமான வரியை தாக்கல் செய்யத் தவறினால் என்ன நடக்கும் தெரியுமா? காலக்கெடுவுக்குள் வரியை சமர்க்க தவறுபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.. அதன்படி 31 டிசம்பர் 2024க்கு தாக்கல் செய்யலாம். கணக்குகளைத் தணிக்கை செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவோருக்கு மட்டும் இந்தக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனையும் கடந்து வருமான வரியை தாக்கல் செய்யவில்லையானால், அது தானாகவே புதிய வரி விதிப்பு முறைக்கு மாற்றப்படும்.
ஒருவேளை ஜூலை 31 ம் தேதிக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச்சட்டம் 234F பிரிவின்படி, தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் 5000 ரூபாய் விதிக்கப்படும்.
யாரெல்லாம் தாக்கல் செய்யலாம்: 5 லட்சம் ரூபாய் வரை வரிக்குட்பட்ட வருமானம் இருந்தால் அதிகபட்சமாக 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வரிக்குட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அதிகபட்சமாக 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல, தணிக்கைக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவோருக்கு வருமான வரித்துறை 3 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்குகிறது. இதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களோ, தொழில் நிறுவனங்களோ கணக்கு தணிக்கையை முடித்த பின் வருமான வரித் தாக்கல் செய்யலாம்.
வரித்தாக்கல்; எனவே, சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களுக்கு விரிவான தணிக்கை தேவை என்பதால், நவம்பர் 30-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்யலாம். உள்நாட்டு நிறுவனங்களிலும் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய நிறுவனங்கள், கூடுதல் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய நிறுவனங்கள் ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகும் வருமான வரித்தாக்கல் செய்யலாம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications