சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தாச்சு அறிவிப்பு! ஆசிரியர் தகுதி தேர்வு- டெட் 2-ம் தாள் தேர்வுகள் ஜன.31 முதல் பிப்.12 வரை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் 2-ம் தாள் தேர்வுகள் ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனங்களை சீனியாரிட்டி அடிப்படையில் மறைந்த முதல்வர் கருணாநிதி நியமித்தார். இதனால் பல்லாயிரக்கணக்கான கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆசிரியர் படிப்பு படித்தவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களாகினர்.

TRB Announces TNTET2022 paper 2 exam dates

அதன்பின்னர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் - (டெட்) தேர்ச்சி பெற்றாக வேண்டும் என மத்திய அரசு திணித்தது. டெட் தேர்வுகள் என்பது மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுகிறவர்கள் இடைநிலை ஆசிரியராக (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆசிரியர்களாக) பணிபுரியலாம். 2-வது தாள் எழுதி தேர்வு பெறுகிறவர்கள், பட்டதாரி ஆசிரியராகலாம் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை). தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த டெட் தேர்வுகளை நடத்தி வருகிறது.

கடந்த 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு- டெட் அறிவிப்பு, மார்ச் 7-ந் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஆன்லைனில் முதல் தாளுக்கு 2,30,878 பேர் விண்ணப்பித்தனர். 2-வது தாளுக்கு 4,01,886 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் முதல் தாளுக்கான தேர்வுகள் கடந்த அக்டோபர் 14-ந் தேதி முதல் அக்டோபர் 19-ந் தேதி வரை கணினி மூலமாக நடத்தப்பட்டது. மொத்தம் 1,53,233 பேர் இத்தேர்வை எழுதி இருந்தனர்.

TRB Announces TNTET2022 paper 2 exam dates

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் தேர்வு எழுதியவர்களில் வெறும் 14% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். எஞ்சிய 86% பேர் தேர்ச்சி பெறவில்லை. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் டெட் 2-ம் தாள் தேர்வுகள் ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையில், இத்தேர்வுகள் கணிணி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சித் தேர்வு தொடர்பான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் வெளியிடப்படும். தேர்வுக்கு முன்பாக 15 நாட்கள் இந்த பயிற்சி வழங்கப்படும். தேர்வு கால அட்டவணை, அட்மிட் கார்டு- ஹால் டிக்கெட் ஆகியவை ஜனவரி 3-ம் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu govt's Teachers Recruitment Board has announced the exam dates of TNTET2022 paper 2 exam. TET 2-nd Paper exams will hold Jan. 31 to Feb.12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X