என் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம்.. நயினார் நாகேந்திரனுக்கு திரிஷா கண்டனம்
சென்னை: என் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மாநில அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி பேசுவதை நான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் பேசியிருந்த நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை திரிஷாவும் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது வழக்கறிஞர் வாயிலாக திரிஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பாதவது:-
திரிஷா கடும் கண்டனம்
அரசியலில் நடுநிலையான நிலைப்பாட்டையே கொண்டு இருக்கிறேன். உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் இன்னும் பொறுப்புடன் நிதானத்துடன் பொது வெளியில் பேச வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை பொது விவாதத்திற்கு உரியது இல்லை. இப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை.
அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.. திரைக்கலைஞர் என்று மட்டுமே நான் அடையாளப்படுத்தப்பட விரும்புகிறேன். அரசியல் ரீதியாக இல்லை. தனக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது. என்று கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக, அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
விஜய் பேசும் போது, "அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார். சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கை வாங்கி காட்டுங்கள்" என விஜய் பேசினார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
திரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வரவேண்டும்
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும்." என்று கூறினார். நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு தவெகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை
பொதுவெளியில் ஒரு அரசியல் தலைவர் பேச்சும் பேச்சா இது.. என்று நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுகவை சேர்ந்த பெண் தலைவர்களும் நயினார் நாகேந்திரன் பேச்சை கண்டித்து இருந்தனர். சர்ச்சைக்குரிய தனது பேச்சு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் நயினார் நாகேந்திரன் கடந்த இரு நாட்களாக இருந்தார்.
இந்த நிலையில் இன்று தனது பேச்சு தொடர்பாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை" என்று கூறியிருந்தார். நயினார் நாகேந்திரன் இப்படி பேசிய சில மணி நேரத்தில் திரிஷா கடும் கண்டனத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா?












Click it and Unblock the Notifications