டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதி இதுவா? எம்ஜிஆர் - ஜெயலலிதா வென்ற தொகுதியாச்சே.. ரூட் கிளியர்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தான் டிடிவி தினகரன் போட்டியிடப்போகும் சட்டசபை தொகுதியின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொகுதி என்பது அதிமுகவின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வென்ற வரலாறையும், மாஜி முதல்வர் எம்ஜிஆர் மனைவி ஜானகி போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னணியையும் கொண்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மொத்தம் 13 சட்டசபை தொகுதிகளை கோரியது.

ஆனால் 9 தொகுதிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 7 பொதுத்தொகுதி, 2 தனித்தொகுதி என்று மொத்தம் 9 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன்
குறிப்பாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி அமமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்புள்ளது. ஏனென்றால் இங்கு மொத்தம் 13 சட்டசபை தொகுதிகள் நடந்துள்ளது.
இதில் 4 தேர்தல்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 சட்டசபை தேர்தல்களில் அதிமுக தான் வெற்றி பெற்றது. இருப்பினும் கடந்த 2019 இடைத்தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் திமுகவின் மகாராஜன் வெற்றி பெற்றார். தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக மகாராஜன் உள்ளார்.
அதிமுக 3 முதல்வர்களின் தொகுதி
மேலும் இந்த தொகுதிக்கும் அதிமுகவுக்கு நெருக்கமான தொடர்புகள் உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்களான அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி இதுவாகும். கடந்த 1984ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டிட்டு வென்று முதல்வரானார். அந்த தேர்தலில் அவர் உடல்நலக்குறைால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபடியே பிரசாரத்துக்கு செல்லாமல் வென்றார்.
பிறகு 1989 ல் எம்ஜிஆர் மனைவியும், முன்னாள் முதல்வருமான ஜானகி இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து 2002 இடைத்தேர்தலில் ஆண்டிபட்டியில் ஜெயலலிதா களமிறங்கி வெற்றி பெற்றார். பிறகு 2006 சட்டசபை தேர்தலிலும் ஜெயலலிதா அதே தொகுதியில் களமிறங்கி வாகை சூடினார்.
டிடிவிக்கு ரூட் கிளியர்
இப்படி தமிழகத்தில் அதிமுகவின் 3 முதல்வர்கள் போட்டியிட்ட தொகுதி என்பதால் இங்கு டிடிவி தினகரன் களமிறங்க ஆர்வமாக உள்ளார். இதனை டிடிவி தினகரன் கடந்த டிசம்பர் மாதமே வெளிப்படுத்தி இருந்தார்.
கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், தனியாக போட்டியிட்டாலும் நான் ஆண்டிப்பட்டியில் தான் களமிறங்குவேன் என்று அறிவித்து இருந்தார். இந்நிலையில் தான் அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் டிடிவி தினகரனின் ரூட் கிளியராகி உள்ளதாம்.
முக்குலத்தோர் அதிகம்
அதேபோல் டிடிவி தினகரன் இந்த தொகுதியை தேர்வு செய்வதன் பின்னணியில் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. இந்த தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக முக்குலத்தோர் சமுதாய மக்கள் உள்ளனர்.
தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 30 சதவீதத்துக்கும் மேலானவர்கள் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. டிடிவி தினகரனும், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முக்கிய தலைவராக உள்ளார். இதனால் தான் அவர் ஆண்டிபட்டியை குறிவைத்து களமிறங்குவதாக சொல்லப்படுகிறது.
அதிமுகவில் அதிருப்தி
இருப்பினும் இந்த முடிவால் அதிமுகவில் ஒரு தரப்பினர் அப்செட் ஆகி உள்ளனர். எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா என்று அதிமுகவின் 3 முதல்வர்கள் போட்டியிட்ட தொகுதியை அமமுகவுக்கு விட்டு கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. இதனால் ஒரு தரப்பின் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் டிடிவி தினகரன் தேனி மாவட்டத்துக்கு நன்கு பரீட்சயமான தலைவர்.
இதற்கு முன்பு அதிமுகவில் செயல்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய போடி நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருந்தவர். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இதனால் அவர் நிச்சயம் அதிமுகவினரை சமாதானப்படுத்தி தனக்கு ஆதரவாக மாற்றிவிடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அமமுகவினர்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications