சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது.. 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்களா.. டிடிவி தினகரன் விளாசல்

ஆசிரியர்களை அழைத்து தமிழக அரசு பேச வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆசிரியர்கள் போராட்டம்.. விளாசிய டிடிவி தினகரன்- வீடியோ

    சென்னை: உண்மையிலேயே, 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்களா என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளதுடன், ஆசிரியர்கள் விவகாரத்தில் அதிகார மமதையில் தமிழக அரசு செயல்படக்கூடாது என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

    இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்தது.

    இது இறுதிப்போர்.. போராட்டம் வாபஸ் இல்லை... வெகுண்டெழுந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு இது இறுதிப்போர்.. போராட்டம் வாபஸ் இல்லை... வெகுண்டெழுந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு

    பள்ளி கல்வித்துறை

    பள்ளி கல்வித்துறை

    இதையடுத்து, இன்று காலை 95 சதவீத உயர்நிலை மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

    கோர்ட் வளாகம்

    கோர்ட் வளாகம்

    இந்நிலையில் தமிழக அரசு தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கில் சிறப்பு கோர்ட்டில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார். பின்னர் கோர்ட் வளாகத்தில், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பேசியதுடன், செய்தியாளர்களிடமே இது சம்பந்தமான கேள்வியையும் எழுப்பினார். அப்போது அவர் சொன்னதாவது:

    உண்மை நிலவரம் என்ன?

    உண்மை நிலவரம் என்ன?

    "உண்மையிலேயே 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்களா, உண்மை நிலவரம் என்னவென்றே தெரியவில்லை. ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் தவறான தகவலை வெளியிட்டு வருகின்றனர். எதற்காக ஊடகங்களும் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ளாமல் இப்படிபட்ட செய்தியை வெளியிடுகிறீர்கள்?

    அதிகார மமதை

    அதிகார மமதை

    இன்னும் பல ஊர்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் விவகாரத்தில் அதிகார மமதையில் தமிழக அரசு செயல்படக்கூடாது. தனது அதிகார பலத்தை காண்பித்து அவர்களை நசுக்க பார்ப்பதைவிடுத்து, ஆசிரியர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றார்.

    English summary
    Ramu has insisted that the Tamil Nadu government should negotiate with the teachers who are conducting the struggle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X