Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களத்தில் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த தவெகவினர், சீமானையும், உதயநிதி ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையின்போது அஜித்குமார் எனும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

TVK Seeman Udhayanidhi Stalin

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த பிரச்சனை தொர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோராப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதியை மறுத்திருந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தை நாடி தவெக அனுமதி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தவெகவினர் பங்கேற்றிருந்தனர். அவர்களிடம் களத்தில் ஒன் இந்தியா தமிழ் பேட்டி எடுத்திருந்தது. அதில், தவெகவினர் சீமான் மற்றும் உதயநிதியை சரமாரியாக விமர்சித்திருந்தனர்.

தவெக பெண் தொண்டர் பேசியதாவது, "சீமான் சரியான பச்சோந்தி. முதலில் விஜய்யை தம்பி, தம்பி என்று அழைத்திருந்தார். ஆனால் விஜய் தனது அரசியலை கையில் எடுத்த பிறகு, தப்பியாது, இதுவாவது என்று சொல்லியிருந்தார். சீமான் ஒரு பச்சோந்தி. அவருக்கு கீழே விஜய்யா? எங்கள் தளபதியின் கால் தூசிக்கு யாரும் வரமாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து உதயநிதி குறித்து பேசிய அவர், "உதயநிதியெல்லம் ஒரு ஆளே கிடையாது. அவருடைய அப்பா மு.க.ஸ்டாலினும் ஆளே கிடையாது. அவங்கெல்லாம் எங்களுக்கு மேட்டரே கிடையாது. என்னுடைய முதல் ஓட்டு உனக்குதான் தலைவா. என்னைக்கும் நாங்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம்" என்று கூறியுள்ளார்.

மற்ற தொண்டர்கள் பேசுகையில், தவெக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடங்கி, ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை அலைகலைப்பது வரை காவல்துறையினர் மோசமாக நடந்தக்கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கின்றனர். சில தொண்டர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும், ஆனால் காவல்துறையினர்கள் தங்கள் சந்தேகத்திற்குரிய நபர்களை போல பாவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தவெகவினரான நாங்கள் என்ன பாகிஸ்தானிலிருந்தா வந்திருக்கிறோம்? எதற்காக எங்களை இப்படி இழுத்தடிக்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்வியை எழுப்பியுள்ளனர்.

எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், தவெக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்றும், மீண்டும் யாரும் ஆட்சியமைக்க முடியாத வகையில் வலுவாக ஆட்சியை நடத்தும் என்றும் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+