Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே உச்சக்கட்டத்தில் கொதிக்க துவங்கிவிட்டது.. ஒருபக்கம் ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை அதிரடியாக முடித்துவிட்டு வேட்பாளர் லிஸ்ட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.. இன்னொரு பக்கம் என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் இழுபறியிலேயே உள்ளது.. இதுதான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பற்றின பிரத்யேக செய்திதான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது..!!

தேர்தல் பணிகளில் திமுக ஒரு படி மேலே போய்விட்டது என்றே சொல்லலாம். ஆம், ஜெட் ஸ்பீடில் செயல்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதமே இதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிய அக்கட்சி, ஜனவரி மாதம் முதலே கூட்டணி அமைக்கும் வேலைகளை ஜரூராக முடுக்கிவிட்டது.

TVK Plan

திமுக ஜெட் ஸ்பீடு

பிப்ரவரியில் கூட்டணிக் கட்சிகளை உறுதி செய்ததோடு, மார்ச் தொடக்கத்திலேயே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளையும் கச்சிதமாகத் தொடங்கிவிட்டது.

கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்துள்ள திமுக, ஆரம்பத்தில் கடும் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளையும் லாவகமாகப் பேசி கன்வின்ஸ் செய்துள்ளது. அடுத்த கட்டமாக, விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலையும் தொடங்கிவிட்டதால், வெகு விரைவில் திமுகவின் தொகுதிப் பட்டியல் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

என்டிஏ கூட்டணியில் நீடிக்கும் சஸ்பென்ஸ்

திமுக இவ்வளவு வேகமாகச் செயல்படும் வேளையில், என்டிஏ கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடே இறுதியாகாமல் இருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளதாம்.

குறிப்பாக, தவெகவை எப்படியாவது தங்கள் பக்கம் வளைத்துப் போட்டுவிடலாம் என பாஜக எடுத்த பகீரத முயற்சி தோல்வியில் முடிந்ததே இந்தத் தாமதத்திற்கு காரணம் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அந்த திட்டம் புஸ்வானமாகி விட்டதால், இப்போது அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி பாஜக இறங்கியுள்ளது.

பியூஷ் கோயல் - 29 தொகுதிகள்

இந்த இழுபறியை உடைக்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை அதாவது மார்ச் 19ம் தேதி தமிழகம் வர உள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இறுதிப் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.

பாஜகவிற்கு முதலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்ற தகவல் கசிந்த நிலையில், இப்போது அது 29 தொகுதிகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட, தங்களுக்கு ஒரு இடமாவது கூடுதலாக இருக்க வேண்டும் என்ற கவுரவப் போட்டி தான் இந்த எண்ணிக்கைக்கு பின்னால் உள்ள சீக்ரெட் மேட்டராகும்.

தாங்கள் விரும்பும் தொகுதிகளை பெறுவதற்கான டீலிங்கை முடிக்கும் முக்கிய பொறுப்பு பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. எனினும் அவருக்கு முன்னதாகவே, மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, டெல்லி தலைமையின் வழிகாட்டுதலின்படி முதற்கட்ட விவாதங்களை நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

நேரம் நெருங்குகிறது - வேட்புமனுத் தாக்கல் சவால்

மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிவடைகிறது. இந்த நாட்களை பார்த்தால் 8 நாட்கள் அவகாசம் இருப்பது தெரியும்.. ஆனால், மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3 புனித வெள்ள), ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் விடுமுறை தினங்களாகும். எனவே, வேட்புமனுத் தாக்கல் செய்யக் கிடைப்பது வெறும் 5 நாட்கள் மட்டுமே.

இந்த குறுகிய காலத்திற்குள் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ உள்ளது. தொகுதி எண்ணிக்கை ஒரு வழியாக முடிவுக்கு வந்தாலும், "யாருக்கு எந்தத் தொகுதி?" என்பதை முடிவு செய்வதில் தான் பெரிய "குஸ்தியே" நடக்கப்போகிறது என அரசியல் நிபுணர்கள் ஆருடம் சொல்கிறார்கள். ஆக மொத்தம் விரைவில் அதிமுகவில் போட்டா-போட்டிகள் அனல் பறக்கும் என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

- நமது சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+