Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். தவெக ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி நிற்கிறார்கள். இந்நிலையில் மார்ச் 27 ஆம் தேதி நாளை மறுநாள் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.

tvk-vijay-tamizhaga-vetri-kazhagam-candidates-introduction-meeting-to-be-held-on-march-27

தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் (TVK Vijay)

தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் 30 ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ளது. அதனால் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று துகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் விஜய் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மும்பை சென்றது சர்ச்சையானது.

234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் என்று விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் தவெக சார்பில் மார்ச் 27 ஆம் தேதி (நாளை மறுநாள்) மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தவெக வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளார்.

முதல்கட்டமாக

ஆனால் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படவார்களா என்று தெரியவிவல்லை. காரணம் தற்போது வரை தவெகவில் சுமார் 117க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை தான் நேர்காணல் நடத்தி தேர்வு செய்துள்ளனர். எனவே முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த 117 வேட்பாளர்களை மட்டுமே அன்றைய தினம் அறிமுகப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இன்று அல்லது நாளை வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டால் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று தவெக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+