என்ன ஆதாரம் இருக்கு? செந்தில் பாலாஜியை எப்படி கைது பண்ணுனீங்க? அமலாக்கத்துறைக்கு நீதிபதி கேள்வி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி சிவி கார்த்திகேயன் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருந்தார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கி உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்றது இல்லை என்று நீதிபதி பரத் சக்கரவர்த்தி தீர்ப்பு வழங்கி உள்ளார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கில் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் வைத்தார்.
கபில் சிபில்: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டம் 19- வது பிரிவின்படி, குற்றம் புரிந்துள்ளார் என நம்புவதற்கான காரணங்களும், ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர், உதவி இயக்குனர் கைது நடவடிக்கை எடுக்கலாம். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம்.
ஆனால், இந்த வழக்கில், கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறையினர் தெரியப்படுத்தவில்லை. கைதுக்கான எந்த ஆதாரமும் இல்லை. எதற்காக கைது செய்கிறோம் என்ற விவரங்களை அவரது உறவினர்களுக்கு கூட தெரியப்படுத்தவில்லை. இந்த வழக்கில் 2 கேள்விகள் எழுகிறது. ஒன்று கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? மற்றொன்று இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது. இதில், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என ஆணித்தரமாக கூறுகிறேன்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பிரிவு 19 படி, கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத் துறைக்கு உள்ளது கைது செய்ய அதிகாரம் இல்லை என்கிறீர்களா? அல்லது காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்கிறீர்களா?
கபில் சிபில்: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை பொருத்தமட்டில், ஏற்கனவே, செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் போல, அமலாக்கத் துறையினர் செயல்பட முடியாது. சட்டப்படி சம்மன் அனுப்ப அவர்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டப் பிரிவு 17, 18- ன் படி அவர்கள் சோதனை செய்து பறிமுதல் செய்யதான் அதிகாரம் உள்ளது. கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை.
நீதிபதி: நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய உத்தர பிறப்பிக்க முடியுமா?கபில் சிபில்: நீதிமன்ற காவலில் வைக்க அதிகாரம் உள்ளது. ஆனால், காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை.
நீதிபதி: அப்படியானால், கைது செய்வதற்கு முன்பு வரை வைத்துள்ள ஆதாரங்களே போதுமானது. கைதுக்கு பின், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என்கிறீர்களா?
கபில் சிபில்: ஆமாம். செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட எவரும் நீதிமன்ற நடைமுறைகளை விரக்தியடையச் செய்ய முடியாது என அமலாக்கத் துறை, அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தது தவறானது. கிரிமினல் நடைமுறைச் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. சி.ஆர்.பி.சி சட்டத்தின் படி, அதிகாரத்தை எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை.மற்ற குற்ற வழக்குகளை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் புரிந்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் புலன் விசாரணை செய்து குற்றத்தை கண்டுபிடிப்பார்கள்.
ஆனால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை பொறுத்தவரை, விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் புரிந்திருக்கிறார் என முடிவுக்கு வரும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் புகார் அளிக்கிறது. அந்த வகையில் அமலாக்கத் துறையின் விசாரணை என்பது கைதுடன் முடிந்து விடுகிறது.
அவர்கள் புலன் விசாரணை செய்ய முடியாது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை. அதுபோல, அமலாக்கத்துறையினர், போலீசார் போல் செயல்பட முடியாது. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத் துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை? அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடியவில்லை என்றால், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடாதது ஏன்?
நீதிபதி: எந்த ஆவணமும் இல்லாதபோது அமலாக்கத்துறைக்கு எங்கிருந்து ஆதாரம் கிடைத்தது? எந்த ஆதாரமும் இல்லாத போது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்தது எப்படி? செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நிலையில்தான் உள்ளது. நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கும்படி அமலாக்கத்துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?
கபில் சிபில்: மருத்துவர்களிடம் சொல்லி உரிய ஏற்பாடுகளுடன் விசாரணை நடத்தியிருக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை, இவ்வாறு வாதம் நடைபெற்றது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications