மாப்பிள்ளை என்ன வேலை செய்றாங்க என்று கேட்டாங்க...துர்காவை ஓரக்கண்ணால் பார்த்த ஸ்டாலின்
பெண் பார்க்கப் போனப்ப மாப்பிள்ளை என்ன வேலை செய்யறாங்க என்று கேட்டாங்களாமே என்று மேடையில் பேசிய சத்தியராஜ் சொல்ல அதற்கு ஓரக்கண்ணால் ஸ்டாலின் பார்த்த போது வெட்கப்பட்டு சிரித்தார் துர்கா.
சென்னை: பொண்ணு பார்க்க போனப்ப மாப்பிள்ளை என்ன வேலை செய்யறாங்க என்று அம்மா வீட்ல கேட்டாங்களாமே என்று விழா மேடையில் இருந்து சத்யராஜ் கேட்க அதற்கு ஸ்டாலின் ஓரக்கண்ணால் பார்க்க, வெட்கப்பட்டு சிரித்தார் துர்கா ஸ்டாலின்.
ஸ்டாலின் தனது பிறப்பு, அரசியல் பயணம், திருமணம், மிசா கைது போன்றவைகளைக் குறித்து உங்களில் ஒருவன் முதல்பாகத்தில் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள சுயசரிதை புத்தகமான உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவில் பேசிய சத்யராஜ், கருணாநிதி, ஸ்டாலின் உடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

சுவாரஸ்ய பக்கங்கள்
சத்யராஜ் தனக்கே உரிய பாணியில் பேசினார். புத்தகத்தில் உள்ள சுவாரஸ்ய பக்கங்களை ரசித்து பேசினார்.
புகாரி ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டது முதல் இந்தி பாடல்களை ரசித்தது வரை பகிர்ந்து கொண்டார். எம்ஜிஆர் பாடல்களை அதிகம் கேட்பார் ஸ்டாலின் என்று சொன்ன சத்யராஜ், புத்தகத்தில் நிறைய சுவராஸ்யங்களை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

பெண் பார்த்த தருணம்
பெண் பார்க்க போனது பற்றி ஸ்டாலின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அதை குறிப்பிட்டபோது சிரித்துக்கொண்டே, பொண்ணு பார்க்க போன போது மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கறாங்க என்று கேட்டாங்களாமே என்று சத்யராஜ் கேட்க, அப்போது கீழே அமர்ந்திருந்த துர்காவை ஓரக்கண்ணால் பார்த்தார் ஸ்டாலின். அந்த சம்பவம் துர்காவின் மனதில் வந்து போயிருக்க வேண்டும் வெட்கப்பட்டு சிரித்தார். அருகில் அமர்ந்திருந்த உதயநிதியும் புன்னகைத்தார்.

மிசா பார்ட் 2
மிசாவில் ஸ்டாலினை கைது செய்த போது ஒரு தலைவனாக பேசியதை எடுத்துக்கூறினார். திமுக வீட்டுப்பிள்ளைகள் சிறை செல்வது போல் ஸ்டாலினும் சிறை செல்கிறார் என்று கூறினார் கருணாநிதி. மிசா பற்றிய நினைவுகளை எழுதியுள்ளார். மிசாவைப்பற்றி மட்டுமே தனி சினிமாவாக எடுக்கலாம் என்றும் சொன்னார் சத்யராஜ். 2வது பாகம் வந்த உடன் படம் எடுக்க ஆசைப்படுகிறேன்.

எம்ஜிஆர் ரசிகர்
தீவிர எம்ஜிஆர் ரசிகனாகிய நான், தீவிர எம்ஜிஆர் ரசிகரை வாழ்த்துகிறேன் என்று சொல்லி எம்ஜிஆர் பட பாடலான வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று சொன்னார் சத்யராஜ். அதிமுக மேடைகளில் அதிகம் ஒலிக்கும் இந்த பாடலை திமுக மேடையில் முதல்வர் ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

2023 மேடை
சட்டசபைத் தேர்தல் முடிந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தலும் முடிந்து விட்டது அப்புறம் ஏன் இந்த பாடல் என்று கேட்கலாம். இந்த 2023க்கான முன்னோட்டம். அந்த மேடையில் அமர வேண்டும் என்றும் சத்யராஜ் சஸ்பென்ஸ் வைத்து பேசினார். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று கடந்த லோக்சபா தேர்தலின் போது சொன்னார் ஸ்டாலின். அதை கோடிட்டு காட்டி பேசியிருக்கிறார் சத்யராஜ்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications