மீண்டும் "தாமரை".. சிங்கிள் டிஜிட் சீட் காங்கிரஸ்.. சறுக்கலில் மாயாவதி.. உபி கருத்து கணிப்புகள்
உபியில் காங்கிரஸ் வெறும் 7 இடங்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது
சென்னை: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 223 முதல் 235 இடங்களில் வென்று பாஜகவே மறுபடியும் ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... அத்துடன் காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களையே பிடிக்கும் என்றும் அக்கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்துக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்தும் வருகின்றன.
இந்நிலையில், ஏபிபி சிவோட்டர் கருத்து கணிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது... அதன்படி, பாஜகவுக்கு 223 முதல் 235 இடங்கள் கிடைக்கும் என்று கணித்து தெரிவித்துள்ளது...

அதிக வாய்ப்பு
அதேபோல 41.5% வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என்றும் கூறியுள்ளது... குறிப்பாக, அவாத், புந்தேல்கண்ட், பூர்வாஞ்சல் மற்றும் மேற்கு உ.பி., ஆகிய அனைத்து பகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது. அதாவது, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என்பதும், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தொங்கு சட்டசபை உருவாகும் என்றும் என்பதே கணிப்புகளின் சாராம்சமாக உள்ளது.

சி வோட்டர்
எனினும், உபியை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. சி வோட்டர் கருத்துப்படி, சமாஜ்வாதி கட்சிக்கு 145 முதல் 147 இடங்களும் கிடைக்குமாம்... அதேபோல 33.3% வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியோ பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று அறுதியிட்டு சொல்கிறது இந்த கணிப்பு.. இத்தனை நாளும் மாயாவதி வாய் திறக்காமல் உள்ளார்..

விமர்சனம்
வழக்கமாக தேர்தல் என்றால், முதல் ஆளாக களத்தில் குதிக்கும் மாயாவதி ஏன் சைலண்ட்டாக இருக்கிறார் என்று தெரியவில்லை.... மாயாவதியின் அமைதி குறித்து ஏற்கனவே பிரியங்கா நிறைய முறை விமர்சித்திருந்தபோதிலும், அதிரடியில் இறங்காமல் மாயாவதி அமைதி காக்க காரணங்கள் தெரியவில்லை.. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்புள்ளதாக சி வோட்டர் கணிப்பு வெளியிட்டுள்ளதையடுத்து, தன் நிலைப்பாட்டை மாயாவதி துரிதப்படுத்துவாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

தோல்வி
அதேபோல, காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை படுமோசமான தோல்வியை சந்திக்கும் என்பதைதான் சிவோட்டர் தெரிவிக்கிறது.. அதாவது வெறும் 7 இடங்கள்தான் கிடைக்குமாம்.. 2017-ல் காங்கிரஸ் 7 இடங்களை பெற்றிருந்தநிலையில், இப்போதும் அதே 7 இடங்களை சிவோட்டர் கணிக்கிறது.. 12.9 வாக்கு சதவீதத்தை பெறக்கூடும் என்றும் தெரிவிக்கிறது.. சுருக்கமாக சொல்லப்போனால், பகுஜன் சமாஜைவிட, காங்கிரஸ் மிககுறைவான எண்ணிக்கையிலேயே வெற்றியை பெறக்கூடும் என்று தெரிகிறது..

வாக்குசதவீதம்
அதேசமயம் வாக்குசதவீதம் பகுஜன்சமாஜைவிட ஓரளவு உயர்ந்துள்ளது.. கடந்த ஒரு வருடமாகவே பிரியங்கா காந்தி உபியில் தங்கி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், சிங்கிள் டிஜிட் வெற்றியே காங்கிரஸ் பெறக்கூடும் என்று சிவோட்டர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது. இன்னொன்றும் தெரியவருகிறது, இதுவரை வெளிவந்த கருத்து கணிப்புகள் எல்லாவற்றிலுமே, உத்தரப்பிரதேசத்தில் பாஜகதான் ஆட்சியை பிடிக்கும் என்றே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications