Lottery ticket: 16 ஆயிரம் கோடி.. வாழ்க்கையை புரட்டி போட்ட லாட்டரி! 10 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம்
சென்னை: ஒரே நாளில் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத திருப்புமுனை அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு அடித்துள்ளது. 2 டாலர் கொடுத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது பெரிய தொகையாக சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
10 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிட்டாலும் செல்வம் குறையாது என பலரும் எண்ணும் அளவுக்கு இவ்ளோ பெரிய தொகையை வென்றது யார்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

லாட்டரி டிக்கெட் பரிசு
லாட்டரியில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாது. டிக்கெட் வாங்க கூட காசில்லாமல் கடன் வாங்குபவர் கூட ஒரே நாளில் பல கோடிக்கு அதிபதியாகும் நிகழ்வு எல்லாம் லாட்டரி அதிர்ஷ்டத்தால் நடக்கும். லாட்டரி வாங்கிய காசுக்கு ஏதாவது பயனுள்ள வகையில் செலவு செய்து இருக்கலாம் என நினைத்து வருத்தப்படும் நிலைதான் பலருக்கும் நடக்கும்.
யாரோ ஒருவருக்குதான் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்று தெரிந்தாலும், அந்த அதிர்ஷ்டசாலி நாமாக இருக்க மாட்டோமா என்ற ஆசையில் லாட்டரி பிரியர்கள் லாட்டரியை வாங்குவதை பார்க்க முடிகிறது. இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் லாட்டரிகள் பற்றிய சுவாரசிய செய்திகள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன.
16 ஆயிரம் கோடி பரிசு
அந்த வகையில், அமெரிக்காவின் பவர் பால் லாட்டரியில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. என்னது 16 ஆயிரம் கோடியா என கேட்பவர்களை வாய்பிளக்க வைக்கும் வகையில் மெகா பரிசுத்தொகை அடித்துள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:-
அமெரிக்காவில் பவர் பால் லாட்டரி மிகவும் பிரபலமாக உள்ளது. கலிஃபோர்னியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த லாட்டரிகள் விற்கப்படுகின்றன. அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள அர்கன்சாஸ் மாநிலத்தின் லிட்டில் ராக் நகரின் அருகே வாங்கப்பட்ட லாட்டரி ஒன்றிற்கு 1.87 பில்லியன் டாலர் பரிசு அடித்துள்ளது.
மிகப்பெரிய பவர் பால் பரிசு
கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாளில் நடைபெற்ற குலுக்கலில் இந்த தொகை அடித்துள்ளது. இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களாக பவர் பால் லாட்டரியில் வெற்றியாளர் யாரும் இல்லை என்ற நிலை முடிவுக்கு வந்தது. 04, 25, 31, 52, 59 என்ற எண்ணை சரியாக தேர்வு செய்த வெற்றியாளர், இந்திய மதிப்பில் சுமார் 14 ஆயிரம் கோடி வென்றுள்ளார்.
இது தொடர்பாக லாட்டரி அதிகாரிகள் கூறுகையில், "வெற்றி பெற்ற டிக்கெட் காபோட் நகரில் விற்பனையானது. சுமார் 27,000 மக்கள் தொகை கொண்ட இந்த நகரம் லிட்டில் ராக்கிற்கு வடகிழக்கில் 42 கிலோமீட்டர் (26 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கடைசி கட்ட டிக்கெட் விற்பனையால் ஜாக்பாட் எதிர்பாராத விதமாக உயர்ந்தது.
அமெரிக்க வரலாற்றில் 2 வது பெரிய தொகை
தற்போது பரிசாக அடித்துள்ள தொகை அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது பெரியதாகும். 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பவர் பால் பரிசும் இதுதான்" என்று தெரிவித்தனர். மேலும், வெற்றியாளருக்கு ரொக்கப் பணமாக $834.9 மில்லியன் பெறும் வசதியும் உள்ளதாக லாட்டரி அதிகாரிகள் கூறினர்.
"பவர் பால் ஜாக்பாட் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துகள்! இது உண்மையிலேயே அசாதாரணமான, வாழ்க்கையை மாற்றும் பரிசு," என்று லாட்டரி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாட் ஸ்ட்ரான் கூறினார். மேலும், "இந்த ஜாக்பாட் வரிசையில் பங்குபெற்ற அனைத்து வீரர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம்.
வாங்கிய நபர் யார்?
வாங்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டும் நாடு முழுவதும் உள்ள பொது திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆதரிக்க உதவுகிறது," என்றும் அவர் தெரிவித்தார். எனினும், இவ்வளவு பெரிய தொகையை வென்ற வெற்றியாளர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. டிக்கெட்டை வாங்கிய நபர் யார் என்பது கூட தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏனெனில், பரிசு விழுந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட மாநிலத்தில் உள்ள விதிகளின் படி, $500,000 மேல் பரிசு அடித்தவர்கள் தங்கள் அடையாளத்தை காட்டாமல் மறுக்க முடியும். எனவே, இத்தனை ஆயிரம் கோடி வென்ற அதிர்ஷ்டசாலி தனது அடையாளத்தை மறைக்கவே விரும்புவார் என்று சொல்லப்படுகிறது.
180 ரூபாய் கொடுத்து வாங்கிய டிக்கெட்
வெற்றியாளர் தனது அடையாளத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தாவிட்டாலும், மாநில அரசிடம் பரிசுத்தொகையை பெறுவதற்காக தனது அடையாளத்தை காட்டியே ஆக வேண்டும். அதேபோல, அந்த மாநில விதிகளின் படி உரிய வரிப்பிடித்தம் செய்யப்பட்டு பரிசுத்தொகை அளிக்கப்படும்.
2 டாலர் விலை அதாவது இந்திய மதிப்பில் ரூ.180 விலை கொண்ட லாட்டரியில் இப்படி பல ஆயிரம் கோடி பரிசு அடித்துள்ள தகவலை பகிர்ந்து வரும் நெட்டிசன்களும் பொறாமை படாத குறையாய் பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் கூறுகையில், இவ்வளவு பெரிய தொகையை வைத்து பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications