சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து.. பிற சமூக மக்களுக்கும் வாழ்த்து

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தமிழ், கேரளா, பெங்காலி உள்ளிட்ட பல தரப்பு மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் சித்திரை 1ஆம் தேதி, இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சார்வரி ஆண்டு நிறைவடைந்து, பிலவ தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியுள்ளது.

பாஜக ஆளும் உ.பி, ம.பி, குஜராத்- சுகாதார துறை படுமோசம்-ஆம்புலன்ஸ் கூட இல்லையே-பதறும் கட்சி சீனியர்கள்பாஜக ஆளும் உ.பி, ம.பி, குஜராத்- சுகாதார துறை படுமோசம்-ஆம்புலன்ஸ் கூட இல்லையே-பதறும் கட்சி சீனியர்கள்

மேலும் கேரளா, வங்காளம் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் தங்கள் புத்தாண்டை இன்று கொண்டாடுகின்றனர். இந்தியா மட்டமின்றி தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பல்வேறு இன மக்களும் இந்த வாரம் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

அதிபர் ஜோ பைடன் ட்வீட்

அதிபர் ஜோ பைடன் ட்வீட்

இதற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இன மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், நானும் ஜில் பைடனும் இந்த வாரம் வைஷாகி, நவராத்திரி, சாங்ரன், மற்றும் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் மற்றும் விஷூ புத்தாண்டு வாழ்த்துக்கள் என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்து, பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது இணையத்தில் பலராலும் ரீட்வீட் செய்யப்பட்டு, வரலாகப் பரவி வருகிறது.

அதிபர் பைடன்

அதிபர் பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தியர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஜோ பைடன் தன்னுடன் தேர்தலில் போட்டியிடத் துணை அதிபர் வேட்பாளராகத் தமிழ் பூர்விகத்தைக் கொண்ட இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை தேர்ந்தெடுத்தார். 200 ஆண்டுக்கால அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் என்ற சிறப்பை கமலா ஹாரிஸ் பெற்றார்.

இந்தியர்களுக்கு முக்கியத்துவம்

இந்தியர்களுக்கு முக்கியத்துவம்

அதேபோல அமெரிக்காவில் பல முக்கிய பொறுப்புகளுக்கு அதிபர் பைடன் தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையே நியமித்து வருகிறார். சுமார் 33 கோடி மக்களைக் கொண்ட அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை என்பது வெறும் 30 லட்சமாகவே உள்ளது. இருந்தாலும்கூட, பல முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை நியமித்து வருகிறார் பைடன். இது அமெரிக்க வாழ் இந்தியச் சமூகத்திற்கு மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

English summary
US President Joe Biden's latest tweet wishing Tamil new year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X