பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் சட்டவிரோதமாக 38 ஈழத் தமிழர்கள்- விடுவிக்க வைகோ கோரிக்கை
சென்னை: பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள 38 ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை: சிங்கள அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆட்பட்டு வருகின்றார்கள். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கப்பல் மூலமாக கனடாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிங்கள இந்திய ஏஜென்ட்கள் பல லட்சக்கணக்கான ரூபாயைப் பெற்றுக் கொண்டு, 38 ஈழத் தமிழர்களை இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்து, கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏமாற்றி விட்டு விட்டு சென்று விட்டனர்

அதற்கு பின்னர் 10.06.2021அன்று இவர்களை கர்நாடக காவல்துறை கைது செய்து, மங்களூர் சிறையில் அடைத்தனர். வெளிநாட்டவர்கள் என்பதால் தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய புலனாய்வுப் பிரிவு இவர்களை விசாரணை செய்து, இவர்கள் குற்றவாளிகள் அல்ல, ஏமாற்றப்பட்டவர்கள். எனவே இவர்களை விடுதலை செய்யலாம் என்று 8.9.2021 அன்று அறிக்கை தாக்கல் செய்தது.
அதற்கு பின்னர் அவர்கள் பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் கொண்டு வந்து சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.
மீண்டும் இதுகுறித்து தேசிய புலனாய்வு பிரிவு 30.10.2021 அன்று மறு உத்தரவு பிரபித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் இவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது.இதன்பின்னும் தங்களை விடுவிக்காததைக் கண்டித்து இவர்கள் அறவழியில் போராடியதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் திரு மஞ்சுநாத் அவர்கள் இவர்களில் 10 பேரை மட்டும் நீலமங்கலம் சிறப்பு முகாமுக்கு மாற்றம் செய்து உள்ளார்கள். அங்கேயும் சுகாதாரம் இல்லாமல் 10+10 அளவுள்ள சிறிய அறைக்குள் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். மீதமுள்ள 28 பேரும் பரப்பன அக்ரகார சிறையிலேயே சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை.எனவே, பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டுள்ள தமிழர்களை ஒன்றிய அரசு உடனடியாக விடுதலை செய்து, இலங்கை தூதரகம் மூலம் அவர்கள் தாய் நாடு திரும்ப ஆவன செய்திட வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ வலியுறுத்தி உள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications