சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமமுகவால் அதிமுகவின் வெற்றி.. 80 தொகுதிகளில் பாதிக்கலாம்.. கருத்துக்கணிப்புகளில் ஷாக் ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: தென் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் என சுமார் 80 தொகுதிகளில் அமமுகவால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கலாம் என பல்வேறு கருத்துக்கணிபுகள் கூறுகின்றன.

ஜூனியர் விகடன், புதிய தலைமுறை, மாலை முரசு, தந்தி டிவி உள்பட பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகின்றன.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதி, ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் வெற்றியை காலி செய்தது அமமுக தான். இதேபோல் கடந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் தென்மாவட்டங்களில் பெரியகுளம், ஆண்டிபட்டி, திருப்பரங்குன்றனம் உள்பட 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி பாதித்ததும் அமமுக தான்.

கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் அமமுகவால் 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கலாம் என ஜூனியர் விகடன், புதிய தலைமுறை, மாலை முரசு, தந்தி டிவி உள்பட பல்வேறு ஊடங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் தெரிகிறது.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவற்றில் எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கே சாதகமாக இருக்கிறது. அதிமுகவின் கொங்கு மண்டலத்தில் கூட திமுக கடும் போட்டியை இந்த முறை தந்துள்ளதாக கணிப்புகள் சொல்கின்றன. இந்நிலையில் ஏராளமான தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன.

கோவில்பட்டி வெற்றி

கோவில்பட்டி வெற்றி

தென்மாவட்டங்களில் எடுத்துக்கொண்டால், கோவில்பட்டியில் கிட்டத்தட்ட டிடிவி தினகரன் வெல்லவே அதிக வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் பல கூறியுள்ளன. இதேபோல் காரைக்குடி, உசிலம்பட்டி, ஒட்டப்பிடாரத்தில் திமுகவிற்கு அமமுகவிற்குமே கடுமையான போட்டி இருக்கும் என்ற அளவிற்கு கணிப்புகள் சொல்கின்றன. அந்த அளவிற்கு அதிமுகவின் வாக்குகளை அங்கு அமமுக பிரிக்கக்கூடும் என்கிறார்கள்

எத்தனை தொகுதிகள்

எத்தனை தொகுதிகள்

தற்போதைய கணிப்புகள் படி, தூத்துக்குடி மாவடத்தில் கோவில்பட்டி, ஶ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் போன்ற தொகுதிகளிலும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குலம் ஆகிய தொகுதிகளிலும் , ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடியிலும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரையிலும், மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு மற்றும் உசிலம்பட்டியிலும், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், திருச்சுழியிலும், தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், வேடசந்தூரிலும் அமமுகவால் அதிமுகவின் வாக்குகள் பாதிக்ககப்படும் அபாயம் உள்ளது.

திருச்சி முதல் வேதாரண்யம் வரை

திருச்சி முதல் வேதாரண்யம் வரை

இதேபோல் டெல்டா மாவட்டங்களில் பார்த்தால் கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஶ்ரீரங்கம் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, திருமயம் ,ஆலங்குடி. அறந்தாங்கி, வேதாரண்யம், பூம்புகார், மன்னார்குடி, திருவிடைமருதூ திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், அரியலூரில் அமமுகவால் அதிமுகவின் வாக்குகள் பாதிக்கபடலாம் என்கின்ற கருத்துக்கணிப்புகள்.

ஈரோடு விழுப்புரம்

ஈரோடு விழுப்புரம்

மேலும் சேலம், திருப்பூர், கோவை, கடலூர், நாமக்கல், ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர், சங்ககிரி, தாராபுரம், மடத்துக்குளம், திருப்பூர் தெற்கு, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், ஈரோடு மேற்கு, அந்தியூர், கூடலூர், விருத்தாச்சலம், புவனகிரி, செஞ்சி, மயிலம், வாணியம்பாடி, குடியாத்தம், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றியை அமமுக பாதிக்கக்கூடும் என்கிறது கருத்துக்கணிப்புகள்.

அமமுக மநீமவால் பாதிப்பு

அமமுக மநீமவால் பாதிப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தாம்பரம், செங்கல்பட்டு, சைதாப்பேட்டை, மதுரவாயல் ஆகிய எண்பது தொகுதிகளில் அ.ம.மு.க கூட்டணியால் அ.தி.மு.க கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கலாம் என்கிறது. இதேபோல் சென்னையின் பெரும்பலான தொகுதிகள் மற்றும் கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜகவின் வெற்றியை மக்கள் நீதி மய்யத்தால் பாதிக்கும் அபாயமும் உள்ளதாக பெருவாரியான கருத்துககணிப்புகளில் தெரிகிறது.

ஓபிஎஸ்க்கும் சிக்கல்

ஓபிஎஸ்க்கும் சிக்கல்

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு போடி தொகுதியில் அமமுகவால் இந்த தேர்தலில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்கிறது கணிப்புகள். போடிநாயக்கனூர் தொகுதியில் கணிசமான வாக்குகளை அமமுக பெறும் என்கிறது கணிப்புகள். வெற்றியை நூலிழையில் தான் தக்க வைக்க வாய்ப்பு உள்ளது என்கிறது பல்வேறு கணிப்புகள்.

தனிப்பட்ட செல்வாக்குகள்

தனிப்பட்ட செல்வாக்குகள்

அதிமுகவின் வெற்றிவாய்ப்பில் அ.ம.மு.க பாதிப்பை ஏற்படுத்த முக்கிய காரணம், அமமுகவில் போட்டியிடும் பலர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எம்.பி, எம்.எல்.ஏவாக இருந்தவர்கள். அவர்களுக்கு என தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் சமுதாய வாக்குகள் உள்ளன. அத்துடன். தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ ஆதரவி உள்ளதால் கணிசாமாக கிடைக்கக்கூடும். வலுவான செல்வாக்கான வேட்பாளர்கள் இரணடாம் இடத்தை பிடித்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை என்கிறது கணிப்பின் முடிவுகள்

English summary
Various polls suggest that the AIADMK may loss more than 50 constituencies in the southern districts and more than 20 constituencies in the delta and northern districts, as well as 10 constituencies in the western districts due to AMMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X