கொரோனா: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி - எச் வசந்தகுமாரின் பேச்சு வைரல்
கொரோனா வைரஸ் நோயினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எச். வசந்தகுமார் லோக்சபாவில் பேசியது வைரலாகி வருகிறது.
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எச். வசந்த குமார் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் நோயை தேசிய பேரிடராக குறிப்பிட்டு பேசியுள்ளார். அவரது பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
எம்எல்ஏவாக இருந்த போதே அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு கன்னியாகுமாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லி சென்றவர் எச்.வசந்தகுமார். தனது கருத்தை லோக்சபாவில் பதிவு செய்து விட்டுத்தான் அமர்வார் வசந்தகுமார். எத்தனை நேரமானாலும் காத்திருந்து பேசுவார் என்று அவருடன் லோக்சபாவிற்கு சென்றவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எச். வசந்தகுமாருக்கு கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்த பின்னரும் உடல் நலம் குணமடையவில்லை. நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் அதிகமாகியே மரணமடைந்துள்ளார். அவரது மறைவு அரசியல் கட்சித்தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எச். வசந்தகுமார் மக்களோடு மக்களாக பயணிப்பவர், எந்த நேரத்திலும் எளிமையாக சந்திக்கக் கூடிய அரசியல் தலைவர் என்றெல்லாம் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் அவர் கடந்த மார்ச் மாதத்தில் லோக்சபாவில் எச். வசந்தகுமார் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
அவரது உரையில் கொரோனா வைரஸ் நோயை தேசிய பேரிடராக அறிவித்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தினசரி கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ. 2000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பேசியுள்ளார். அவரது நேரம் முடிவடைந்து விட்டது என்று சபாநாயகர் பொறுப்பில் இருப்பவர் கூறியும் அனுமதி பெற்று தனது உரையை பேசி முடித்துவிட்டுதான் அமர்கிறார் வசந்தகுமார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
On 20th March Kanyakumari MP #Vasanthakumar ji in his Lok Sabha speech kept demand of declaring #COVIDー19 as "National Disaster"..
— Niraj Bhatia (@bhatia_niraj23) August 28, 2020
He spoke also for direct benifit transfers to daily wagers & to help small businesses ..
He was interrupted with laugh within few secs..
RIP sir🙏 pic.twitter.com/L5ezM2b6l4
மறைந்த எச். வசந்தகுமாரின் உடல் இன்றைய தினம் சென்னையில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தொகுதி மக்கள் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications