"அன்பு மனைவி லதாவுக்கு"! ரூ 30 மணியார்டர் அனுப்பிய ரசிகர்.. பழம்பெரும் நடிகை லதா பகிர்ந்த சுவாரஸ்யம்
சென்னை: அன்பு மனைவி லதாவுக்கு என கடிதம் எழுதிய ரசிகர் என்னை சந்திக்க வீட்டிற்கே வந்துவிட்டார் என பழைய நினைவலைகளை உரிமைக் குரல் நடிகை லதா பகிர்ந்துள்ளார்.
நடிகை லதாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் எம்ஜிஆர். அவருக்கு அப்போது 15 வயது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜிஆருடன் முதல்முதலாக அறிமுகமானார் லதா.
இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. எம்ஜிஆர்தான் லதாவை தெலுங்கு திரையுலகில் நாகேஸ்வர ராவுடன் நடிக்க பரிந்துரைத்தார். இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். ரோஜா சீரியலில் நடித்திருந்தார்.

அபியும் நானும்
தற்போது சன் டிவியில் அபியும் நானும் எனும் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் சீனியர் நடிகை லதா, வித்யா மோகன் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் வித்யாவின் மாமியார் நடிகை லதா. சூப்பர் மாமியார் ஸ்வீட்டான மருமகள் எனும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைகாட்சி சேனலில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை அசார் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகை லதாவும் வித்யாவும் கலந்து கொண்டனர்.

ரசிகர்கள்
அப்போது லதா கூறுகையில் அந்த காலத்தில் எங்களை பார்க்க ரசிகர்கள் வருவார்கள். அப்போது புகைப்படம் கேட்பார்கள், அதன் பின்னால் கையெழுத்திட்டு புகைப்படங்களை தபாலில் அனுப்பி வைப்போம். அவ்வாறு ஒரு முறை சித்தூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் "அன்புள்ள மனைவி லதாவுக்கு மணியார்டர் அனுப்பியுள்ளேன்" என எழுதியிருந்தார். ரூ 30 ஐ மணியார்டராக அனுப்பியிருந்தார்.

40 ஆண்டுகள்
இது நடந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும். ஒரு நாள் என்னை வந்து அவரது வீட்டிற்கு அழைத்து செல்வதாக கடிதம் எழுதியிருந்தார். நானும் ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறார் என நினைத்தேன். ஆனால் அவர் சீரியஸாகவே ஒரு நாள் எனது வீட்டிற்கு வந்துவிட்டார். அவரை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார். பிறகு என் வீட்டில் இருந்தவர்கள் அவருக்கு புத்திமதி சொல்லி அவரை பேருந்தில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கல்லாக இருந்த என்னை சிற்பமாக செதுக்கியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவர் நன்றாக உண்பார். ஆனால் அதே நேரத்தில் உடற்பயிற்சியும் செய்வார் என்றார் லதா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications