துணைவேந்தர்கள் நியமனம் எப்போது? சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் அப்டேட்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி விரைவில் துணைவேந்தர்களை நியமிப்போம் என தமிழக உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அமைச்சர் கோவி. செழியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் மாநில அரசால் நடத்தப்படும் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வேந்தர் என்ற இடத்தில் அரசு என மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பினார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. வழக்கின் முடிவில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இதன் காரணமாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் வந்தது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சட்டத்திருத்தங்களின் செயல்பாட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை பிப்ரவரி 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில், 'இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது ஏன்?' எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி தலைமை நீதிபதி அமர்வு அல்லது பொருத்தமான அமர்வில் பட்டியலிடப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்களின் வாதங்களைக் கேட்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், வழக்கை ஆறு வாரங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. முன்னதாக வழக்கை மேற்கோள் காட்டி பிப்ரவரி 2 ஆம் தேதியன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்தது சட்டவிரோதம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக பேசியுள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், "முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை விரைவில் நியமிப்போம். துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசியக் கொடி ஏற்றும் உரிமையை கலைஞர் எப்படி பெற்றுத் தந்தாரோ, அதேபோல் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை மாநில முதலமைச்சருக்கே உண்டு என்ற உரிமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொடுத்துள்ளார். சட்டரீதியாக போராட்டம் நடத்தி, அதற்கான தீர்ப்பையும் தமிழ்நாடு பெற்று, இந்தியாவிற்கே வழிகாட்டியுள்ளது. துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிக்கலாம் என்ற உத்தரவை பெற்றது மிகப்பெரிய பெருமை." எனத் தெரிவித்துள்ளார்.
-
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications