Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக தொகுதி வேண்டாம்.. 2 தொகுதிகளில் விஜய் போட்டி? கடைசி நேரத்தில் ரகசியத்தை உடைக்க தவெக திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் இன்னிங்ஸைத் தொடங்க ஒரு அதிரடி வியூகத்தை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உதய சூரியன் சின்னம் போட்டியிடாத இடத்தில் விஜய் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Election dmk aiadmk

திடீர் திருப்பம்: இரண்டு தொகுதிகள்

நடிகர் விஜய் இந்தத் தேர்தலில் இரண்டு வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேட்புமனுத் தாக்கலின் கடைசி வாரம் வரை ரகசியமாக வைக்க அவர் முடிவு செய்துள்ளார். மற்ற முக்கிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்த பிறகு, கள நிலவரத்தைக் கணித்துவிட்டு தனது முடிவை அறிவிக்க அவர் காத்திருப்பதாகத் தெரிகிறது.

திமுக-வை நேரடியாக மோதத் தவிர்ப்பாரா?

விஜய்யின் இந்த வியூகத்தின் பின்னணியில் ஒரு முக்கியமான அரசியல் கணக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆளுங்கட்சியான திமுக-வின் நேரடிப் போட்டியைக் குறைப்பதற்காக, திமுக போட்டியிடாத தொகுதிகளை அவர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு (காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள்) ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம், திமுக-வின் 'உதயசூரியன்' சின்னத்தை நேரடியாக எதிர்கொள்வதைத் தவிர்த்து, கூட்டணி கட்சிகளுக்கு எதிரான போட்டியில் தனது வெற்றியை எளிதாக்க அவர் முயல்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் எவை?

விஜய் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவார் என்பது குறித்துப் பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன. இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளை அவர் குறிவைப்பதாகத் தெரிகிறது. இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம், ஏதேனும் ஒரு தொகுதியில் இழுபறி ஏற்பட்டாலும் மற்றொரு தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்துகொள்ளும் பாதுகாப்பு நுணுக்கத்தை அவர் கையாள்வதாகத் தெரிகிறது.

இந்த காத்திருந்து காய் நகர்த்தும் பாணி, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் பிளான் என்ன?

தமிழக அரசியல் களம் தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களைச் சுற்றியே சுழல்கிறது. விஜய்யின் வருகை இந்த இரு கட்சிகளுக்குமே ஒரு சவாலாக அமைந்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்குகளை விஜய் பிரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது."ஊழலற்ற அரசியலை முன்னெடுப்போம், ஒரு பைசா கூடத் தொடமாட்டேன்" என உறுதிபடக் கூறும் விஜய், யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாமல் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

திரையரங்கில் ஒரு படம் 'ஹிட்' ஆவதைத் தீர்மானிப்பது பாக்ஸ் ஆபீஸ் வசூல்; ஆனால், விஜய்யின் அரசியல் பயணம் 'ஹிட்' ஆகுமா என்பதை 2026 தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும். இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.. தவெக கட்சிக்கு உள்ள மக்கள் ஆதரவு தொடர்பாக முக்கியமான சர்வே ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசி கட்டமாக உண்மையில் கட்சிக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு உள்ளது என்று விஜய் சர்வே எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சர்வே எடுப்பதில் பிரபலமான தனியார் அமைப்பு ஒன்று.. இந்த சர்வேவை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+