Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?
சென்னை: சென்னை பெருங்குடியில் ஒரு ஹோட்டல் ஒன்றில் இட்லி, வடைக்கான தொகையுடன் கேஸ் பயன்பாட்டிற்கும் சேர்த்து கட்டணம் வசூலித்ததாக ஒரு பில் வைரலாகி வரும் நிலையில் அதை ஹோட்டல் நிர்வாகம் போலியான பில் என மறுத்துள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரு, சென்னை, மும்பை போன்ற இடங்களில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக எரிவாயு இறக்குமதி தடைபட்டுள்ளதால், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் பெங்களூரில் 40% ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல ஆயிரம் ஹோட்டல்கள் மூடும் அபாயத்தில் உள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் மார்ச் 10 முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல சிறிய ஹோட்டல்கள், உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், இரண்டு நாட்களுக்குள் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
சில இடங்களில் மார்ச் 11 அன்று "விடுமுறை" என அறிவிக்கப்பட்டது.
மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் 20% வரை ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.
மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து, வணிக சிலிண்டர் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளது. சிலிண்டர் முன்பதிவுக்கு 25 நாட்கள் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசும் மாற்று ஏற்பாடுகளை ஆலோசித்து வருகிறது.
இந்நிலை தொடர்ந்தால் உணவு விலை உயர்வு, தொழிலாளர்கள் பாதிப்பு, டெலிவரி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சூழல் விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தற்போது பல இடங்களில் ஹோட்டல்கள் மூடல் தொடர்கிறது.
நேற்று முதல் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பலை இயக்க இந்தியாவுக்கு ஈரான் அனுமதி கொடுத்தது. எனவே இன்னும் 10 நாட்களில் கேஸ் தட்டுப்பாடு நிலை சீராகும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்றைய தினம் வாடிக்கையாளர் ஒருவர் காலை உணவாக ஒரு இட்லியையும் மெது வடையையும் சாப்பிட்டார். அவை இரண்டும் தலா ரூ 33.33 பைசா, இதில் ஜிஎஸ்ட் 5 சதவீதம் சேர்த்து பில் தொகை வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதுதான் நடைமுறையும் கூட! இந்த பில்லை பார்த்ததும் வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி. அதில் கேஸ் என குறிப்பிட்டு 9 ரூபாய் 52 காசுகள் சேர்க்கப்பட்டன. இதெல்லாம் அநியாயம் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் ஒன் இந்தியா சார்பில் பேசினோம். அந்த ஹோட்டல் நிர்வாகி கூறுகையில், "இதெல்லாம் பொய்யான செய்தி, யாராவது கேஸ் பில்லை சேர்க்க முடியுமா? அதிலும் ஒரு இட்லியை யாராவது 33 ரூபாய்க்கு விற்க முடியுமா? வடையும் 33 ரூபாய் என வந்துள்ளது. யாரோ எடிட் செய்து போட்டுள்ளார்கள். அந்த பில்லை பார்த்தாலே எடிட் செய்யப்பட்டது என்பது நன்றாக தெரிகிறது. எங்கள் ஹோட்டலில் அது போல் கேஸ் பில் என எந்த கட்டணத்தையும் நாங்கள வசூலிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
-
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications